ADVERTISEMENT

புக்தி என்றால் என்ன? தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு?

புக்தி என்றால் என்ன?  தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு? புக்தி என்றால் என்ன? தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு?

புக்தி என்பது தசையுடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு திறன்.  அதாவது, எப்படி ஒருவரின் வாழ் நாளில் ஒவ்வொறு தசையாக அடுத்தடுத்து வரிசையில் வந்து செல்லுமோ அதே போல, ஒரு தசை நடைபெறும் வேளையில் ஒவ்வொரு புக்தியாக வந்து செல்லும்.

இதில், தசை எதுவோ அதுவே புக்தியாக முதலில் துவங்கும்.  எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு வியாழன் தசை நடைபெறுகிறது என்றால், முதல் புக்தி வியாழனாக இருக்கும்.

தசைக்கும் புக்திக்கும் கோள்களின் வரிசை அதுவே.  அதில் வேறுபாடோ மாற்றமோ இல்லை.

ஆனால் புக்தியின் நேர அளவு நடை பெறும் தசையை பொருத்து மாறுபடும்.

புக்தியின் நேர அளவை கணக்கிடும் முறை:


ஒவ்வொரு தசைக்கும் இத்தனை ஆண்டுகள் என ஆருடம் தெள்ளத்தெளிவாக கணித்து கொடுத்து விட்டது.

புக்தியின் நேர அளவை தசையை வைத்து கணக்கிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு சாதகருக்கு ஞாயிறு தசை என்று வைத்துக்கொள்வோம்.  

இவருக்கு செவ்வாய் புகிதியின் நேர அளவை எப்படி கணிப்பது என்று பார்க்கலாம்.

ஞாயிறு தசை 6 ஆண்டுகள் நீடிக்கும்.  செவ்வாய் தசைக்கு கொடுக்கப்பட்டுள்ள நேர அளவு 7 ஆண்டுகள்.

அப்படியானால் ஞாயிறின் 6 ஆண்டுகள்  X செவ்வாயின் 7 ஆண்டுகள் என பெருக்கினால் 42 என்று விடை வருகிறது.

வந்த விடையில் கடைசி எண்ணிற்கு முதல் இடத்தில் ஒரு புள்ளி வைக்கவும்.  இங்கே 4.2 ஆகும்.

இதில் நான்கு என்பது நான்கு திங்கள்களை குறிக்கிறது.  புள்ளிக்கு பின் உள்ள 2 ஐ மூன்றால் பெருக்க வேண்டும்.  அப்படியானால் 6 என்று வருகிறது.  இந்த 6 நாட்களை குறிக்கும்.

ஆக, இந்த சாதகருக்கு ஞாயிறு தசையில் செவ்வாய் புக்தி 4 திங்கள்களும் 6 நாட்களும் நடைபெறும்.

மற்றொரு எடுத்துக்காட்டு:  வியாழன் தசையில் காரி புக்தியின் நாட்களை எப்படி கணக்கிடுவது என பார்க்கலாம்.

வியாழன் தசை 16 ஆண்டுகள் X காரி ஆண்டுகள் 19 = 304 என்றூ விடை வருகிறது.

முன் சொன்னது போல, 30.4 ர்ன்று புள்ளி வைக்க வேண்டும்.  புள்ளிக்கு முன் உள்ளது திங்கள்கள்.  அப்படியானால் 30 திங்கள்கள் என்று வருகிறது.

புள்ளிக்கு அடுத்து வந்த 4 ஐ 3 ஆல் பெருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.  அது 12 என்று வருகிறது.  அது நாட்களை குறிக்கும்.

இந்த கணக்கின் படி 30 திங்கள்களும் 12 நாட்களும் வருகிறது.  அதையே 2 ஆண்டுகள், 6 திங்கள்கள் 12 நாட்கள் என கணக்கிட்டு சொல்லலாம்.

சாதகருக்கு புக்தியால் ஏற்படும் தாக்கம் என்ன?

ஒரு தசை நடைபெரும்போது, அது ஒவ்வாத தசையாக இருந்தால் தீங்கும், ஒவ்வும் தசையாக இருந்தால் நல்லவையும் நடைபெறும்.

அதே வேளையில், அந்த தசை அதன் நாட்கள் அளவு வரை நல்லதையே அல்லது தீயவற்றையே செய்யும் என்று சொன்னாலும், புக்தி என்கிற தாக்கம் வருவதால், பலன்களில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு ஞாயிறு தசை முழுவது கேடு பலன்கள் என்று கணக்கிட முடியாது.  ஏனெனில் அதே ஞாயிறு தசை கொண்ட சாதகருக்கு நல்ல பலன்களை தரும் புக்தி நடைபெற்றால் நல்லது நடக்கும்.

இதே கணக்கீடை நல்ல பலன் தறும் தசைகளுக்கும் தீய புக்தியுடன் பொறுத்தி சாதக பலனை கணிக்க வேண்டும்.

எழிதாக சொல்வதானால், ஒரு தசையில், அந்த தசைக்குறிய கோள் புக்தி என முதலில் துவங்கி 9 ஆருட கோள்களும் ஒவ்வொன்றாக வந்து செல்லும்.

ஆகையால், அந்த புக்திகளில் சில புக்திகளுக்கு உரிமையான கோள்கள் நல்ல நிலை கொண்டிருந்தால் நல்ல பலன்களும், கேடான இடத்தில் இருந்தால் தீய பலன்களும் கிடைக்கும்.

ஆகவே, தசையின் உட்பிரிவாக புக்தியை கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading