வெள்ளி முளைத்து, விடிகாலைப் பொழுது துவங்குகிறது. வெள்ளை என்பது ஒரு நாளின் துவக்கத்தை குறிப்பதாக தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. தமிழர் பண்பாடும், "வெள்ளி" துவக்கத்தின் அடையாளமாகவே கருதுகிறது.
இதே வெள்ளியை, ஆருட பலன் கணிப்பவர்கள், பாலியல் தொடர்பான சிந்தனைகளையும், ஆடம்பரங்களையும் ஏற்படுத்தும் கோள் என வரைமுறை படுத்துகின்றனர்.
வெள்ளியை வீனஸ் என்று ஆங்கிலத்திலும், வடமொழியில் சுக்கிரன் எனவும் அழைக்கின்றனர்.
இந்தக் வெள்ளிக் கோளின் இருப்பிடத்தைப் பொறுத்து, ஜாதகருக்கு பாலியல் தூண்டுதல், ஏற்றம் இறக்கமாக அமையப்பெறும் என்பது ஆருடம் கணிப்போரின் கணிப்பு.
ஜாதக யோகங்கள் 300க்கும் மேற்பட்டதாக இருந்தாலும், அதில் மாளவியா யோகம் என்பது ஒரு சிறப்பான யோகமாகும்.
வெள்ளி ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று, ஜாதகத்தில், ஜாதகரின் ராசிக்கு அல்லது லக்கனத்திற்கு 1, 4, 7 அல்லது 11 இடங்களில் அமைந்திருந்தால் இந்த மாளவியா யோகம் ஏற்படுகிறது.
வெள்ளியானது, ராகு, கேது, ஞாயிறு, வியாழன், செவ்வாய், திங்கள், என இந்த கோள்களுடன் இணைந்தோ அல்லது பார்த்தாலோ இந்த மாளவியா யோகம் பாதிப்படைந்து விடும்.
இந்த யோகம் உள்ளதா என கணிக்க... இங்கே சொடுக்கவும்...
இதை ஜோதிடர்கள் சுபயோகம் என கணித்தாலும், திருமண வாழ்வில் உள்ளவர்களுக்கு இது ஒரு சற்று கவனத்திற்கு உரிய யோகமே.
இந்த யோகத்தினால், நல்ல பெயரும் புகழும், செல்வச் செழிப்பும் பெற்றவராக ஜாதகர் இருப்பார். மேலும் இந்த யோகம் கொண்டவர்கள், எதையும் ஆடம்பரமாக, முழுமையாக மகிழ்வுடன் அனுபவிப்பார்கள்.
பாலியல் தூண்டுதல் பெருமளவில் இந்த யோகத்தினால் ஏற்படுவதால், ஒழுக்கம் சற்று இடறல் பட வாய்ப்பு உள்ளது.