வியாழனும் கேதுவும் இணைந்து இருந்தால் கேள் யோகம் என்றழைக்கப்படுகின்ற கோடீஸ்வர யோகம் ஏற்படுகிறது என்கிறது ஆருட நூல்கள்.
இத்தகைய செல்வம் குவிக்கும் யோகம் கொண்டவர்கள், வெளிநாடுகளுக்கு அல்லது வாழுகின்ற பகுதியில் இருந்து புலம்பெயர்ந்து, மற்றொரு இடத்தில் பெரும் செல்வம் ஈட்டும் நபராக விளங்கி, செல்வந்தருக்கெல்லாம் செல்வந்தராக வாழ்வார்.
இந்த யோகம் மிகச்சிறந்த யோகம் என ஆருடம் எடுத்துக்கூருகிறது. நமது நாட்டின் முதல் முதன்மை அமைச்சர் திருவாளர் நேரு அவர்களுக்கு, ஜாதகத்தில் தனுசில் ஆட்சி பெற்று, வியாழனும் கேதுவும் சேர்ந்து இருந்தன.
கேதுவின் வலிமையான இடங்களான விருச்சிகம், கன்னி, கும்பம் ஆகிய ராசி வீடுகளில் எதிலாவது ஒன்றில் இருந்தாலும், ஒரு நிலையில் நிற்க இயலாத தன்மை கொண்ட ராசிகளான (சர ராசிகள்) மேஷம் அல்லது கடகம் ஆகியவற்றில் வியாழனும் கேதுவும் இணைந்து இருந்தால் இந்த யோகத்தில் மிகச்சிறந்த யோக பலனை தரும்.
மேலும், இவர்கள் மிகச்சிறந்த செல்வ நிலையை அடைந்து, பார் போற்றும் அளவிற்கு செல்வத்தை தம்மிடம் குவிப்பார்கள்.