தமிழ் பஞ்சாங்கம் என்பது பல்லாயிறம் ஆண்டுகளுக்கு முன், வான்
ஆராய்சியாளர்களால் கோள்களின் நிலையை கணக்கீடு செய்த ஐந்திறன் நாள் காட்டி
ஆகும்.
இந்த முறைப்படி, ஒரு பொழுது என்பது, ஐந்து திறன்கள் அடங்கியதாக கணக்கிடப்படுகிறது.
அவை, முறையே
ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி
நிலவு புவியை சுற்றி வர 30 நாட்கள்
எடுத்துக்கொள்கிறது என கணக்கிட்டு, நிலவின் ஒவ்வொறு நிலைக்கும் ஒரு பெயர்
சூட்டப்படுகிறது. அதையே திதி என்று அழைக்கிறார்கள். அவை முறையே
வளர்பிறையில் புது நிலவில் துவங்கி பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி,
பஞ்சமி, சச்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி,
சதுர்த்தசி என்றும்,
மீண்டும் முழுநிலவில் துவங்கி தேய்பிறையில் பிரதமை, துதியை, திருதியை,
சதுர்த்தி, பஞ்சமி, சச்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி,
திரயோதசி, சதுர்த்தசி என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றில் புது நிலவு,
முழு நிலவு மற்றும் அட்டமி ஆகிய நாட்கள் பெரும் திறன் அடங்கிய நாட்களாக
(கணத்த) கணக்கிடப்படுகின்றன.
நிலவின் ஒவ்வொறு நிலையிலும் திறன்
இருப்பதாக கணக்கிட்டால், நிலவு ஒரு திதியில் இருந்து மற்றொரு திதிக்கு
மாறும் பொழுது அதன் திறன் வெளிப்பாட்டில் மாறுதல் இருக்கத்தானே வேண்டும்.
இன்னும் தெளிவு படுத்த வேண்டுமானால், தேய்பிறையில் வரும் சதுர்த்தசி திதியின் பாதி நாளிலேயே புதுநிலவின் திறன் வெளிப்பட துவங்கும்.
அதாவது, அந்த பாதி நாளில் பாதி பெரும் திறன் அடங்கிய நாளாக கணக்கிடப்பட வேண்டும். ஆக திதியின் பாதி நாளில் கணக்கிடப்படுவது கரணம்.
ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும்
வரும். அவை முறையே பவம், பாலவம், கௌலவம், தைதுளை, கரசை, வணிசை, பத்திரை,
சகுனி, சதுச்பாதம், நாகவம், கிமிஸ்துக்கினம். அப்படியானால், 30 திதிக்கு
60 கரணம்.
இரண்டு கரணம் சேர்ந்தால் ஒரு திதி கணக்கிடப்படும். பவம் கரணம் புதுநிலவு
நாளுக்கு மறுநாள் திதியான பிரதமை திதியின் பாதியில் துவங்குவது பவம் கரணம்
ஆகும்.
இவ்வாராக
1. துதியை திதிக்கு பாலவம், கௌலவம் கரணம்களும்,
2. திரிதியை திதிக்கு தைதுளை ,கரசை கரணம்களும்
3. சதுர்த்தி திதியில் வணிசை ,பத்திரை கரணம்களும்
4. பஞ்சமி திதிக்கு மீண்டும் பவம், பாலவம் கரணம்களும்
இப்படி சுழற்சி முறையில் 7 கரணம்களும் வரும் .
மீதம் உள்ள நான்கு கரணம்களில்
1.சகுனி கரணம் தேய்பிறை சதுர்த்தசி பிற்பாதியில் வரும்.
2. சதுச்பாதம், நாகவம் ஆகிய கரணம்கள் அமாவாசை முன்பாதி ,பிற்பாதில் வரும் .
3. கிம்ஸ்துக்னம் வளர் பிறை பிரதமை பின் பாதியில் வரும் .
இந்த நான்கு கரணமும் இந்த நான்கு இடத்தில் மட்டும் வரும்.
நல்ல செயல்கள் மேற்கொள்ள ஏற்ற கரணம் - பவம், பாலவம், கௌலவம், தைதுளை, கரசை
தீய தன்மை கொண்ட கரணம்கள்: வணிசை, பத்திரை, சகுனி, சதுச் பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம்
(தாரா, தாரகை, நட்சத்திரம்): நிலவு
புவியை சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில்
இருக்கிறதோ அந்தப் பிரிவுக்கு என்று ஒரு விண்மீன் கணக்கிடப்பட்டுகிறது.
இன்றைய அறிவியலின் படி நிலவு புவியை விண்மீன்களின் அடிப்படையில் சுற்றிவர
எடுத்துக்கொள்ளும் நேர அளவு 27 நாட்களாகும்.
தெளிவாக சொல்வதானால், நிலவு புவியில் இருந்து ஒரு விண்மீன் இருப்பிடத்தின்
கோணத்தில் கணக்கிடப்படுகிறது என்று கணக்கிட்டால், அது துவங்கிய அதே
விண்மீன் கோணத்தை வந்தடைய 27 நாட்கள் தான் எடுத்துக்கொள்கிறது.
இருப்பினும், நாம் 30 நாட்கள் என்று கணக்கிடுவது புதுநிலவிற்கும், முழுநிலவிற்குமான நாட்கள் அளவை கணக்கிட்டு தான்.
ஆக, விண்மீன் அடிப்படையில், 27 விண்மீன்கள் கணக்கிடப்படுகின்றன.
அதனால் தான் இராசி வட்டத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளாக குறிக்கின்றனர்.
விண்மீன்கள் அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை,
புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அச்தம், சித்திரை,
சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்,
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்பனவை ஆகும்.
ஒவ்வொரு விண்மீனும் அது கடந்து செல்லும் பாதையின் தடன்கள் நாண்காக
பிரிக்கப்பட்டு ஒவ்வொரு விண்மீனுக்கும் 1,2,3,4, என 4 தடங்கள்
கொடுக்கப்படுகின்றன.
நிலவு 27 நாட்களில் 27 விண்மீன்களை
புவியின் கோணத்தில் இருந்து கணக்கிட்டால் கடந்து செல்கிறது என்பதை நாம்
அறிவோம். ஒரு முழு சுற்றளவு 360° என்றால், அதை 27 ஆல் வகுத்தால் 13° 20
என்ற அளவு கிடைக்கிறது.
ஆக, 13° 20 என்பதற்கு ஒரு யோகம் என கணக்கிட்டு 27 யோகங்கள் உள்ளன.
பதஞ்சலி என்றழைக்கப்பட்ட முனிவர் ஒருவர் எழுதிய நூல்தான் யோகம். அதுவே இந்த யோகத்திற்கான அனைத்து விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது.
யோகம் என்பதை எளிய சொல்லில் சொல்ல வேண்டுமானால், உயிரையும் கடவுளையும் ஒன்றினைத்து வாழ்வது என்பதாகும்.
தமிழில் யோகம் என்பதை பல நேரங்களில் தவறான பொருள் கருத்துடன்
பயன்படுத்துகிறோம். "அவனுக்கு என்ன... யோகக்காரன்" என்று சொல்வார்கள்.
இது அவன் நல்லூழ் கொண்டவன் (அதிர்ச்சிட்டசாலி) என்ற பொருளுடன்
பயன்படுகிறது. இது முற்றிலும் தவறு.
ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும்.
ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவுவதாக
ஆரூடம் சொல்பவர்கள் கணிக்கின்றனர்.
யோகத்தின் சமற்கிருத பெயர்களும் அதற்கான தமிழ் பொருளும்:
1. விஷ்கம்பம் - மனநடுக்கம்,
2. ப்ரீதி - அன்பு, பாசம்,
3. ஆயுஷ்மான் - வாழ்நாள்,
4. சவுபாக்கியம் - புண்ணியம்,
5. சோபனம் - நலம்,
6. அதிகண்டம் - பெரிய இடரல்கள்,
7. சுகர்மம் - அறம்,
8. திருதி - துணை,
9. சூலம் - சில திசைப் பயண இடையூறுகள்,
10. கண்டம் - இடர்பாடுகள்,
11. விருத்தி - ஆக்கம்,
12. துருவம் - நிலையான தன்மை பெறுதல்,
13. வியாகாதம் - பாம்பு முதலானவற்றால் அச்சம்,
14. அரிசனம் - மகிழ்ச்சி,
15. வச்சிரம் - ஆயுதங்களால் தொல்லை,
16. சித்தி - வல்லமை,
17. வியதீபாதம் - கொலை,
18. வரியான் - காயம்,
19. பரிகம் - தாழ்வு,
20. சிவம் - காட்சி,
21. சித்தம் - திறம்,
22. சாத்தியம் - புகழ்,
23. சுபம் - காவல்,
24. சுப்பிரம் - தெளிவு,
25. பிராம்மம் - மாயை,
26. மாஹேத்திரம் - படைப்புகளை பற்றிய அறிவு,
27. வைத்திருதி - பேய்களால் தொல்லை.