ADVERTISEMENT

யோனி பொருத்தம் என்றால் என்ன?

யோனி பொருத்தம் என்றால் என்ன? யோனி பொருத்தம் என்றால் என்ன?

யோனி பொருத்தம் என்றால் என்ன?

யோனி என்ற வடமொழி சொல்லிற்கு தமிழில்  ஆவுடை என்று பொருள். ஆவுடை என்றால், பெண் பிறப்புறுப்பு என்பதாகும்.

இந்த ஆவுடை பொருத்தம் அல்லது யோனி பொருத்தம் என்பது எதற்கு என்றால், திருமண உறவில், பெண் எத்தகைய இன்பத்தை அனுபவிப்பாள் என்பதை கணிப்பதற்காக உள்ளது.

இந்த பொருத்தம் இருந்தால் திருமணம் நீண்டு இருக்கும்.

இந்த பொருத்தம் கணிப்பதற்காக சோதிடவியலாளர்கள் பெண் மற்றும் ஆணை மிருக வகைகளாக பிரித்துள்ளனர்.

விண்மீன்கள் 13 குழுக்களாக மிருகங்கள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. ஆண் மிருகம் மற்றும் பெண் மிருகம் என ஒவ்வொரு குழுவிலும் இரண்டு விண்மீன் இருக்கும்.

நீங்கள் உடனே, 27 விண்மீன்களுக்கு 13 குழுக்கள் என்றால் மீதம் ஒன்று வருகிறதே என என்னலாம்.

ஆம், அந்த மீதம் உத்திராடம் விண்மீனாகும். இது பால் அற்றதாக நடுவில் இருக்கிறது.

மிருகங்களும் அவற்றின் விண்மீன்களும்

அசுவினி - ஆண் குதிரை
சதயம் - பெண் குதிரை

பரணி - ஆண் யானை
ரேவதி - பெண் யானை

கார்த்திகை - பெண் ஆடு
பூசம் - ஆண் ஆடு

ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை

திருவாதிரை - ஆண் நாய்
மூலம் - பெண் நாய்

ஆயில்யம் - ஆண் பூனை
புனர்பூசம் - பெண் பூனை

மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி

உத்தரம் - எருது
உத்திரட்டாதி - பசு

அஸ்தம் - பெண் எருமை
சுவாதி - ஆண் எருமை

சித்திரை - ஆண் புலி
விசாகம் - பெண் புலி

கேட்டை - கலை மான்
அனுஷம் - பெண் மான்

பூராடம் - ஆண் குரங்கு
திருவோணம் - பெண் குரங்கு

பூரட்டாதி - ஆண் சிங்கம்
அவிட்டம் - பெண் சிங்கம்

உத்திராடம் - மலட்டு மாடு அல்லது கீரி

இந்த மிருகங்களை வைத்து பகை விண்மீன்கள் கணக்கிடப்படுகிறது.

கீழ் காண்பவை பகை விலங்குகளும் அவற்றின் விண்மீன்களும்.

குரங்கு - ஆடு : பூராடம், திருவோணம் - பூசம், கிருத்திகை

சிங்கம் - யானை : அவிட்டம், பூரட்டாதி - பரணி, ரேவதி

குதிரை - எருமை : அஸ்வினி, சதயம்- சுவாதி, அஸ்தம்

பசு -புலி : உத்திரம், உத்திராடம், விசாகம்- சித்திரை, உத்திரட்டாதி

எலி - பூனை : மகம், பூரம் - ஆயில்யம், புனர்பூசம்

பாம்பு - எலி : ரோகிணி, மிருகசீரிஷம்- மகம், பூரம்

கீரி- பாம்பு : உத்திராடம்- ரோகினி, மிருகசீரிஷம்

மான் - நாய் : கேட்டை, அனுஷம்- மூலம், திருவாதிரை

ஆண் மற்றும் பெண் பகை மிருகங்களை கொண்டிருந்தால் மட்டுமே பொருத்தமில்லை என்க.

பொருத்தம்

ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் என்றாலும் பொருத்தம் சரியாக உள்ளது.

அதே போல பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம் என்றாலும் பொருத்தம் உள்ளது.

பகை மிருகம் மட்டும் சேர்க்கக் கூடாது. மற்றவை அனைத்தும் பொருந்துகிறது என எடுத்துக்கொள்ளவும்.

 


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading