மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பிழைப்பு, வருவாய் மற்றும் தொழில் ஆகியவற்றிற்கான உரிமையாளர் காரி (சனி) கோள் ஆகும். தொழில் மற்றும் வருவாய் ஆகியவற்றிற்கு, அடிப்படையாக காரி (சனி) உரிமை ஏற்று இருப்பதால், வெள்ளி அல்லது அறிவன் (புதன்) அல்லது வியாழன் போன்ற கோள்களின் சேர்க்கை பத்தாம் வீட்டில் ஏற்பட்டால், அந்த ராசிக்காரர் தாமாக தொழில் செய்து அதன் மூலம் பெருமளவில் வருவாய் ஈட்டும் யோகம் கிடைக்கப் பெற்றவராக இருப்பார்.
மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், எந்தச் சூழ்நிலையிலும், பங்குச் சந்தை - குதிரை பேரம் - பரிசுச் சீட்டு போன்றவற்றில் முதலீடு செய்தல் கூடாது. அதாவது நிலையற்ற தன்மை கொண்ட எந்த தொழிலை அல்லது முதலீட்டை மேற்கொள்ள கூடாது. அதாவது, மேஷ இலக்கனத்தை கொண்டவர்கள், நிலையான மற்றும் தெளிவான முதலீடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக இவர்கள் இரும்பு, நிலம், எந்திரங்கள், இயந்திரங்கள், வண்டிகள், பழைய பொருட்களை வாங்கி விற்றல் போன்ற தொழில்களைச் செய்தால் சிறந்த வருவாய் ஈட்டுவார்கள்.
பெரும்பாலும் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், உடலுழைப்பு சார்ந்த, வேர்வை சிந்தும் தொழிலை மேற்கொள்வர். அத்தகைய தொழில் செய்வோர் தமது வாழ்வில் பொருளாதார வெற்றி உறுதியாக பெறுவர்.
லக்கனத்துடன் அறிவன் (புத) அல்லது வெள்ளி போன்ற கோள்கள் சேர்ந்து இருந்தால், அத்தகைய லக்கன அமைப்பு கொண்டோர், ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மேற்கொண்டு, பல நூறு பேரை வேலைக்கு அமர்த்தி, பெரிய அளவிலான தொழில் மேற்கொள்வர்.
லக்கனத்துடன், வியாழன் கோள் சேர்ந்து இருந்தால், குறிப்பாக வலுப்பெற்று இருந்தால், அத்தகைய அமைப்பு கொண்டோர், கடல்கடந்த தொழில் அமைப்புகள் பெறுவர். அவர்கள் சட்ட ஆலோசகர், நிதித்துறையின் ஆலோசகர், பாதுகாப்பு ஆலோசகர் என பிறருக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கான சிறந்த தொழிலை கொண்டிருப்பர்.
லக்கனத்துடன், வியாழன் மற்றும் அறிவன் கோள்கள் சேர்ந்து வலுப்பெற்று இருந்தால், அத்தகைய ராசிக்காரர்கள், கல்லூரி பேராசிரியர், பள்ளி தலைமை ஆசிரியர், வங்கிப் பணியில் உயர்ந்த பொறுப்பு என சிறந்து விளங்குவர்.
லக்கனத்துடன், செவ்வாய் சேர்ந்து வலுப்பெற்று இருந்தால், அவர்கள் ராணுவம் - காவல்துறை - தீயணைப்புத்துறை - போக்குவரத்து துறை போன்றவற்றில் உயர் பதவிகள் அடைவர்.
செவ்வாயும் ஞாயிறும் சேர்ந்து லக்கணத்துடன் அமைந்து இருப்பவர்கள் அரசுத்துறைகளில் பெரிய பதவி பெற்று இருப்பர். நிலவு அல்லது ராகு அல்லது கேது இந்த அமைப்புடன் சேர்ந்து இருந்தால், அத்தகைய ராசிக்காரர்கள், மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவர்.
செவ்வாய் மற்றும் ஞாயிறுடன், வியாழன் சேர்ந்து இருந்தால், உயர்ந்த பதவிகளை தனியார் அல்லது அரசு துறைகளில் பெற்றிருப்பர்.
காரி கோளுடன் ராகு அல்லது கேது ஒரே வீட்டில் இருந்தால், அத்தகைய ராசிக்காரர்கள், நிலையான வருவாய் என்று வாழ்வில் அல்லல் படுவர்.