ADVERTISEMENT

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? உண்மையில் என்ன?

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? உண்மையில் என்ன? செவ்வாய் தோஷம் என்றால் என்ன? உண்மையில் என்ன?

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

செவ்வாய், இராசி பலன்கள் படி பார்த்தால் அது ஒரு நெருப்பு கோள். வீரம் செரிந்தது.

செவ்வாய், ஜாத்கத்தில் வலுப்பெற்றால் அவர்கள் இரானுவம், காவல் துறை, தீயனைப்பு துறை என வீரம் தேவையுள்ள உயர் பொருப்புக்களில் வாழ்வில் சிறந்து விளங்குவர்.

சிலருக்கு இந்த செவ்வாய் தோஷமாக அமையும். இப்படி தோஷமாக அமையப்பெற்றவர்களுக்கு எளிதில் திருமணம் நடந்தேராது.


யாருக்கு செவ்வாய் தோஷம்?


பிறப்பு சாதகத்தில் லக்கனம், நிலவு, வெள்ளி (சுக்கிரன்) முதலிய கோள்களுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருதப்படும்.

மேற்சொன்ன கணக்கு முறையை வைத்துக்கொண்டு செவ்வாய் இவற்றில் எங்காவது ஒரு இடத்தில் உள்ளதா என்று பார்த்துவிட்டு இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ளது என கூறிவிடுவர்.


விதி விலக்கு


இதில் இராசியை பொருத்து விதி விலக்கும் உண்டு. மேற்சொன்ன கணக்குப் படி 100 பேருக்கு செவ்வாய் தோஷம் உள்ளதாக கணக்கிடோமானால், இந்த தள்ளு விதியை கொண்டு செவ்வாய் தோஷம் உள்ளவர் பட்டியலை நீக்கினால் மீதம் 3 பேர் தான் தேருவார்கள்.

அந்த விலக்கு விதி என்னவென்றால், மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் கிடையாது.

ஞாயிறு, அறிவன் (புதன்), வியாழன் (குரு), காரி (சனி), ராகு, கேது முதலிய கோள்களில் ஏதோ ஒன்றுடன் செவ்வாய் இணைந்து இருருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலோ தோஷம் இல்லை.

செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு
இடத்திலிருந்தாலும் தோஷம் இல்லை.

செவ்வாய் 2மிடமாகி அது மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷம் இல்லை.

செவ்வாய் 4மிடமாகி அது மேஷம், விருச்சிகம் ஆனால் தோஷம் இல்லை.

செவ்வாய் 12மிடமாகி அது ரிஷபமும் துலாம் ஆனால் தோஷம் இல்லை.

செவ்வாய் 7மிடமாகி இது மகரம் கடகம் ஆனால் தோஷம் இல்லை.

செவ்வாய் 8மிடமாகி இது தனுசும், மீனமும் ஆனால் தோஷம் இல்லை.

சிம்மம், கும்பம் செவ்வாய் இருந்தால் எந்த லக்னத்துக்கும் தோஷம் இல்லை

அறிவனும் (புதன்), செவ்வாயும், சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலும் தோஷம் இல்லை.

வியாழனும் (குரு), செவ்வாயும், சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலும் தோஷம் இல்லை.

நிலவும், செவ்வாயும், சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலும்,தோஷம் இல்லை.

அது ஏன் இந்த விதி விலக்கு என்றால், தொடர்புடைய இராசி வீடுகளில் செவ்வாய் ஆட்சியானது உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் இல்லாமல் போகும்.


செவ்வாய் தோஷம் என்றால் உண்மையில் என்ன?


ஆரூடத்தின் படி, செவ்வாய் தோஷம் என்றால் பிற தோஷங்கள் போல நம் முன்னோர் செய்த தீங்கினாலோ அல்லது நாம் முற்பிறவியில் நம்மை அறியாது செய்த குற்றங்களினாலோ ஏற்படுவது அல்ல.

முன் சொன்னது போல செவ்வாய் கோள் என்பது ஒரு வெப்பம் நிரைந்த நெருப்பு கோள் ஆகும்.

ஆக, இந்த தோஷம் உடையவர்களுக்கு சூடு பெருமளவு இருக்கும். இங்கே சூடு அல்லது வெப்பம் என்பது உடல் உறவு ஆசை அல்லது அது தொடர்பான உடல் தேவை. நேரடியாக இதை சொன்னால் இராசிக்காரரின் பெற்றோருக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கும் என்பதால், இதை ஒரு தோஷம் என்று ஒரு இடக்கரடக்கல் (Euphemism - சொல்லத்தகாத வார்த்தைகளுக்கு வேறு மரைமுக வார்த்தை பயன்படுத்துவது) சொல் கொண்டு கூறியுள்ளனர்.


தோஷத்திற்கு தோஷம் தான் பொருத்தம்


40 வயதை கடந்த ஆண் பெண்ணிற்கு இந்த தோஷம் மட்டுமல்ல எந்த தோஷமும் இல்லை என கொள்ளலாம். அவர்களுக்கு ஜாதக பொருத்தம் பார்க்க தேவை இல்லை.

இந்த செவ்வாய் தோஷம் உடையவர்கள் வெப்பம் அதிகம் கொண்டவர்களாக இருப்பதால், அதற்கு இணையாக அதே போன்ற வெப்பம் உடைய்வர்களையே மனம் முடிப்பது சிறந்தது.

தேவைக்கு தேவை சரி செய்து கொள்ளும். அதனால் இல்லறம் சிறக்கும்.


செவ்வாய் தோஷம் நீக்க என்ன வழி?


உண்மையில் எந்த வழியும் இல்லை. இது பாவத்தால் வந்த வினை அல்ல. இது உடல் தேவையை பொருத்தது.

கடவுள் வழிபாடு மனதிற்கு நல்லது என்பதால் கோவில் குளங்களுக்கு சென்று வருவதில் தவறில்லை. அதற்காக இந்த செவ்வாய் தோஷம் நீங்கிவிடும் என கணக்கிடுவது முறையல்ல.

அதனால் இந்த தோஷம் உடையவர்கள் அதே தோஷம் கொண்டவர்களை மனப்பதே சிறப்பு.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading