இராகு தசையில், முதலில் துவங்குவது இராகு புக்தி. அதை தொடர்ந்து வியாழன், காரி என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.
இராகு தசையில் புக்திகளில் நேர அளவு:
இராகு 2 ஆண்டு 8 திங்கள் 12 நாள்
வியாழன் 2 ஆண்டு 4 திங்கள் 24 நாள்
காரி 2 ஆண்டு 10 திங்கள் 6 நாள்
அறிவன் 2 ஆண்டு 6 திங்கள் 18 நாள்
கேது 1 ஆண்டு 18 நாள்
வெள்ளி 3 ஆண்டு
ஞாயிறு 10 திங்கள் 24 நாள்
நிலவு 1 ஆண்டு 6 திங்கள்
செவ்வாய் 1 ஆண்டு 18 திங்கள்
ஆக மொத்தம் 18 ஆண்டுகள்
1. இராகு புக்தி: அரசால் பக வரும். மனம் கலக்கமடைந்து இருக்கும். வாழ்கை துணையால் பாதிப்பு வரும். கருமை நிறம் தவிர்த்தல் நலம்.
2. வியாழன் புக்தி: இன்பம் வந்து சேரும். செல்வம், அரசால் நன்மை, மகிழ்ச்சி, நினைப்பதெல்லாம் கை கூடல் என வாழ்வு சிறக்கும்.
3. காரி புக்தி: காரி என்றாலே துக்கம் தான். காரி புக்தியில் இன்பமா கிடைக்கும்? துன்பம் வரும். ஆனால் வந்த உடன் விலகிவிடும். நோய் நோக்காடுகள் வரும்.
4. அறிவன் புக்தி: எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவு பலன் கிட்டும். வாழ்வு மேன்மை அடையும். கடவுள் நம்பிக்கை உண்டாகும். எதிர்பாரா நன்மைகள் தாமாக வந்து சேரும். மேலான நிலையில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.
5. கேது புக்தி: குழந்தைகளால் துன்பம் வரும். நோய் வரும். பெண்களால் பாதிப்பு வரும். அரசிடம் பகை உண்டாகும்.
6. வெள்ளி புக்தி: பொன்னும் பொருளும், நிலமும், செல்வமும், மகிழ்வும், அரசிடம் நன்மையும் என நல்ல நேரம் பிறக்கும். பல பெண்கள் சேர்க்கைக்கு வாய்ப்பு வந்தாலும் ஒழுக்கம் தவறாமை நன்மை தரும்.
7. ஞாயிறு புக்தி: அரசால் நன்மை கிடைக்கும். எலி போன்றவற்றை உண்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. வேரு ஊருக்கு அல்லது வீடு மாறுதல் நடை பெறும்.
8. நிலவு புக்தி: வாழ்க்கை துணையால் பொருள் சேதம் உண்டாகும். வாழ்க்கை வாழ்வதற்கே ஆனால் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவம் புரியும்.
9. செவ்வாய் புக்தி: நெருப்பிடம் தள்ளி இருங்கள். பகை உண்டாகாமல் பிறரிடம் பழகுங்கள். வீட்டில் சண்டை என்பது மன அழுத்தம் தரும். ஆகவே துணையுடன் அமைதியாக செல்லுங்கள்.