ஆருடத்தில் உள்ள 7 நிலையான கோள்களுக்கு, அவரவர்களுக்கு என்று ஒரு ராசி வீடு அல்லது வீடுகள் உரிமையாக கொண்டு, அவற்றை ஆட்சி வீடுகளாக ஜாதகருக்கு பலன்களை தரும் என்பதை கற்றோம். இத்தகைய வீடுகளில் கோள்கள் இருக்கும் நிலையில், அவை, 100% தமது திறன்களை ஜாதகரின் மீது வெளிப்படுத்தும் என்பது ஆருட கணிப்பு.
அதற்கு அடுத்தபடியாக, உயர்நிலை (உச்ச) வீடுகள் என்பதில், ஆருடத்தில் உள்ள 9 கோள்களும் குறிப்பிட்ட ராசி வீடுகளில் உயர் நிலைப் பெற்று, தமது உரிமை வீட்டில் இருப்பதை காட்டிலும் கூடுதலாக 25% திறன்களை, அதாவது 125% வலுவை ஜாதகரின் மீது வெளிப்படுத்தும் என்பதையும் கற்றோம்.
நட்பு வீடுகள் 9 ஆருட கோள்களுக்கும் உள்ளன. அத்தகைய நட்பு வீடுகளில் இருக்கும் பொழுது, தமது திறன்களை முறையாக பாதிப்பின்றி வெளிப்படுத்தும் என்பதையும் கற்றோம்.
இங்கே நாம் கோள்களின் நடுநிலை (சமம்) கொண்ட வீடுகள் குறித்து. அதாவது, அத்தகைய வீடுகளில் அவை இருக்கும் பொழுது பெரிதாக தீமையும் செய்யாது, அதேபோன்று நல்லவற்றையும் பெரிதாக செய்து விடாது. இதில் குறிப்பிட்டு அறிவது, நிலையான 7 கோள்களுக்கு மட்டுமே நடுநிலை வீடுகள் உண்டு. ராகு-கேது ஆகிய நிழல் கோள்களுக்கு நடுநிலை வீடு என்று எதுவும் இல்லை.
சிம்மம் ராசி வீடு எப்படி எந்த கோள்களுக்கும் உயர்வான நிலையை தருவது இல்லையோ, அதே போன்று நடு நிலையையும் அது எந்த கோள்களுக்கும் வழங்குவது இல்லை.
எந்த எந்த கோள்களுக்கு, எந்த ராசி வீடுகள் நடுநிலை தன்மையை கொடுக்கும் என்பதை குறித்து பார்க்கலாம்.
ஞாயிறு : மிதுனம், கடகம் மற்றும் கன்னி
திங்கள் : மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம்
செவ்வாய் : ரிஷபம், துலாம் மற்றும் கும்பம்
அறிவன் (புத) : மேஷம், விருச்சகம், தனுசு, மகரம் மற்றும் கும்பம்
வியாழன் : கும்பம்
வெள்ளி : மேஷம் மற்றும் விருச்சகம்
காரி (சனி) : தனுசு மற்றும் மீனம்