ADVERTISEMENT

கேது தசை - தசா புக்தி பலன்கள்

கேது தசை - தசா புக்தி பலன்கள் கேது தசை - தசா புக்தி பலன்கள்

கேது தசையில், முதலில் துவங்குவது கேது புக்தி.  அதை தொடர்ந்து வெள்ளி, ஞாயிறு என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.

அசுவினி, மகம், மூலம் ஆகிய விண்மீன்கள் கேது தசையை முதலாவதாக கொண்டிருக்கும்.  கேது தசையின் மொத்த நேர அளவு 7 ஆண்டுகள்.

கேது தசையில் புக்திகளில் நேர அளவு:

கேது 4 திங்கள் 27 நாள்
வெள்ளி 1 ஆண்டு 2 திங்கள்
ஞாயிறு 4 திங்கள் 6 நாள்
நிலவு 7 திங்கள்
செவ்வாய் 4 திங்கள் 27 நாள்
இராகு 1 ஆண்டு 18 நாள்
வியாழன் 11 திங்கள் 6 நாள்
காரி 1 ஆண்டு 1 திங்கள் 9 நாள்
அறிவன் 11 திங்கள் 27 நாள்

1.  கேது புக்தி:  நெருக்கிய உறவினர்களின் பகை.  பெற்ற தாயே பகையாக நிற்பாள்!

2.  வெள்ளி புக்தி:  வாழ்க்கை துணை துணையாக இருக்கும்.  நினைப்பதெல்லாம் நடந்தேறும்.  செல்வம் சேரும்.  அறிவு ஆற்றல் பெருகும்.

3.  ஞாயிறு புக்தி:  வெளி நாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு கிட்டும்.  நோய் உண்டாகும்.  அலைச்சல் மிகுந்த வேலை வரும்.  மன அமைதி இன்றி இருக்கும்.

4.  நிலவு புக்தி:  பிற பாலினத்தவரால் பகை உண்டாகும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்காது.  தீமைகள் வந்தாலும் தாமாக விலகி விடும்.

5.  செவ்வாய் புக்தி:  அச்சம், மன அமைதி இல்லாமை, சண்டை, சச்சரவு, பகை, தடை, கேடு, நெருப்பால் தீமை என போராத நேரமிது.

6.  இராகு புக்தி:  அரசிடம் பகை ஏற்படும்.  நல்ல செயல்கள் எதுவும் நடக்காது.  அலைச்சல் மட்டுமே மிஞ்சும்.

7.  வியாழன் புக்தி:  அரசால் நன்மை கிடைக்கும்.  திருமணம் நடைபெறும்.  செல்வம் சேரும்.  பொருட்கள் வாங்கும் நேரமிது.

8.  காரி புக்தி:  இடம் மாறுவீர்கள்.  உடல் நோய் வந்து விலகும். மனம் அமைதியில்லாமல் இருக்கும்.

9.  அறிவன் புக்தி:  சுற்றத்தார் பகை கிடைக்கும்.  கல்வி பாதியில் நிற்கும்.  எண்ணிய செயல் நடந்தேராது.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading