"எண்ஜான் உடலுக்கு தலையே தலைமை" என்கிறது தமிழ் பழமொழி. இந்த பழமொழியின் படி தலையே உடலுக்கு தலைமையேற்று விளங்குகிறது. இந்த தலைக்கு ஒப்பானதுதான் லக்னம், என்கின்றன ஆருட நூல்கள்.
மனித உடல் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல்வேறு உடல் உறுப்புகளை கொண்டிருப்பது போன்று, 12 ராசி வீடுகளும் ஒவ்வொரு உடல் உறுப்பின் தன்மையை உள்ளடக்கியுள்ளன. அதில் முதல் தலைமை வீடு, லக்னம் இருக்கும் வீடு என்று கொள்ளவேண்டும்.
லக்னம் இருக்கும் வீடு, தலை.
இரண்டாவது வீடு முகம்.
மூன்றாவது வீடு கழுத்து.
நான்காவது வீடு மார்பு.
ஐந்தாவது வீடு மேல்வயிறு.
ஆறாவது வீடு கீழ் வயிறு.
ஏழாவது வீடு மூட்டுகள்.
எட்டாவது வீடு பிறப்புஉறுப்பு.
9வது வீடு தொடைகள்.
பத்தாவது வீடு முழங்கால்.
11வது வீடு கணுக்கால்.
12வது வீடு உள்ளங்கால்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலின்படி, எந்தெந்த வீடுகள் எதற்கு பொறுப்பானவை என்பது குறித்து பார்க்கலாம்.
லக்னம் இருக்கும் வீடு ஆயுளை குறிக்கிறது.
இரண்டாவது வீடு தோற்றத்தை குறிக்கிறது.
மூன்றாவது வீடு உடன்பிறப்புகள் குறித்து குறிக்கிறது.
நான்காவது வீடு தாய் தந்தையரை குறித்து குறிக்கிறது.
ஐந்தாவது வீடு குழந்தைச் செல்வத்தை குறிக்கிறது.
ஆறாவது வீடு உடல்நலத்தை குறிக்கிறது.
ஏழாவது வீடு திருமண உறவை குறிக்கிறது.
எட்டாவது வீடு மரணத்தை எடுத்துரைக்கிறது.
9வது வீடு ஆன்மீக ஈடுபாட்டை குறிக்கிறது.
பத்தாவது வீடு அடையும் புகழை எடுத்துரைக்கிறது.
பதினொன்றாம் வீடு நட்பு வட்டாரத்தை சொல்கிறது.
பன்னிரண்டாம் வீடு பகைவர்கள் குறித்து சொல்கிறது.