ராசி பொருத்தம் என்றால் என்ன? ராசி பொருத்தம் இருப்பதால் என்ன பயன்? இராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது?
ராசி பொருத்தம் என்பது ஆண் குழந்தை பிறக்குமா பிறக்காதா என்பதை குறித்து பார்க்கப்படும் பொருத்தம் ஆகும்.
இந்த பொருத்தம் பழைய நாட்களில் பார்க்கப் பட்டது எதனால் என்றால் ஆண் பிள்ளையே குடியின் அடுத்த தலைமுறை அடையாளம் என கற்கால மனிதர்கள் என்னியதால் தான்.
பிற பொருத்தங்கள் பார்பதற்கு பெண் விண்மீன் முதல் ஆண் விண்மீன் வரை எண்ணி வருவோம்.
ஆனால் இந்த இராசி பொருத்தம் பார்ப்பதற்கு பெண் இராசி முதல் எண்ணி வந்தால் 6 ஆம் நிலைக்கு தள்ளி ஆண் இராசி இருக்குமானால் பொருத்தம் என கணக்கிடப்படுகிறது.
அதே வேளையில், ஒரே இராசியாக இருப்பினும் பொருத்தம் என எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு ஒரே இராசியில் மனம் முடிக்கும் பொழுது, ஆணின் விண்மீன் பெண்ணின் விண்மீனிற்கு முந்தையதாக இருக்க வேண்டு,
அதிலும் ஒரே விண்மீனாக இருந்தால், ஆணின் விண்மீன் தடம் முந்தைய நிலையில் இருக்க வேண்டும்.
எனவே பெண் ராசி தொட்டு 2, 3, 4, 5 மற்றும் 6 ஆகிய ராசி எனில் பொருத்தமில்லை.
அதே போல் பெண் ராசி தொட்டு ஆண் ராசி 7 அல்லது 8 என்றால் ஓரளவு பொருந்துகிறது.
பெண் ராசி முதல் ஆண் ராசி 1, 9, 10, 11, 12 ஆகிய 5 ராசிகள் நன்றாக பொருந்தும் எனலாம்.
மகேந்திர பொருத்தம் இருந்தால் இந்த பொருத்தம் பார்க்கத் தேவையில்லை எனலாம்.
தமிழ் சோதிடர்களை பொருத்த வரை, இந்த இராசி பொருத்தம் அவ்வளவு உன்னிப்பாக பார்ப்பதில்லை.
ஏனெனில், தமிழர் பண்பாட்டில் ஆணும் பெண்ணும் நிகர் என்று இருப்பதால்.