ADVERTISEMENT

லக்னம் என்றால் என்ன?

லக்னம் என்றால் என்ன? லக்னம் என்றால் என்ன?

லக்னம் என்றால் என்ன?

லக்னம் என்பது, குழந்தை பிறக்கின்ற நேரத்தில் என்ன ராசி இருக்கிறதோ அது தான் குழந்தையில் லக்னம்.

விண்மீன்களை வைத்து நாம் பிறந்த இராசியை கணிக்கிறோம். பிறந்த ராசி என்பது அப்பொழுதைய விண்மீன் தொடர்பானது.

இந்த லக்னம் என்பது விண்மீன் தொடர்பானது அல்ல.

இது ஞாயிறு தொடர்பானது. மற்றும் திங்களை பொறுத்து அமையும்.

லக்னம் என்றால் என்ன: ஆண்டு, திங்கள், ராசி

ஒரு ஆண்டிற்கு 12 திங்கள்கள் உள்ளன. சித்திரை துவங்கி பங்குனி வரை 12 திங்களுக்கு ஒவ்வொரு திங்களுக்கும் ஒரு ராசியில் ஞாயிறு தோன்றும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது


  1. சித்திரை மேசம் ராசி
  2. வைகாசி ரிஷபம் ராசி
  3. ஆனி மிதுனம் ராசி
  4. ஆடி கடகம் ராசி
  5. ஆவணி சிம்மம் ராசி
  6. புரட்டாசி கன்னி ராசி
  7. ஐப்பசி துலாம் ராசி
  8. கார்த்திகை விருச்சிகம் ராசி
  9. மார்கழி தனுசு ராசி
  10. தை மகரம் ராசி
  11. மாசி கும்பம் ராசி
  12. பங்குனி மீனம் ராசி

லக்னம் என்றால் என்ன: நேரம், பாகை, ராசி

ஒரு உருண்டை 360 டிகிரி கொண்டிருக்கும். ஆக, புவி தன்னை தானே ஞாயிறை நோக்கி சுற்றிக்கொள்ள 360 டிகிரி சுற்ற வேண்டும்.

நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம். இந்த 24 மணி நேரம் என்பது 1440 நிமிடங்கள்.

1440 ஐ 360 ஆல் வகுத்தால் 4 வருகிறது. அப்படியானால் ஒரு டிகிரி புவி நகர்வதற்கு 4 நிமிடங்கள் என்றாகிறது.

இந்த ஒரு டிகிரி நகர்வதற்கான 4 நிமிட நேரத்தை ஒரு பாகை என்றழைக்கிறார்கள்.

ஜோதிடத்தில் 12 ராசி உள்ளது. 360 டிகிரியை இந்த 12 ராசி கொண்டு வகுத்தால் 30 என்று வருகிறது.

ஒரு நாள் பொழுதில், அதாவது 24 மணி நேரம் என்கிற 1440 நிமிடத்தில், ஞாயிறு காலையில் எழுவது முதல் 12 ராசிகளும் வரிசையாக வந்து செல்கிறது என்று வைத்தால், 120 நிமிடங்களுக்கு ஒரு ராசி என்றாகிறது.

அதாவது 30 பாகைக்கு - 120 நிமிடங்களுக்கு - 2 மணி நேரத்திற்கு ஒரு ராசி. ஒரு நாளுக்கு 12 பாகைகள் என 12 ராசி.

லக்னம் கணிப்பது எப்படி?


எடுத்துக்காட்டாக சித்திரை திங்கள் முதல் நாள் காலை 06.11 மணிக்கு ஞாயிறு எழுகிறது.

நாம் ஏற்கனவே சித்திரை என்றால் ஞாயிறு எழும் ராசி மேஷம் என்று மேலே அட்டவனையில் படித்தோம் அல்லவா!

அப்படியானால், சித்திரை முதல் நாள் காலை 06.11 ஞாயிறு தோன்றும் நேரத்தில் மேஷம் லக்னம் துவங்குகிறது.

ஒரு ராசி 30 பாகை நேரம் அதாவது 120 நிமிடங்கள் இருக்கும். ஆக, 06.11 மணி முதல் 06.10.59 வரை மேஷம் லக்னம்.  இந்த நேரத்தில் பிறந்தவர்கள் மேஷம் லக்னம் கொண்டிருப்பர்.

அடுத்து 08.11 முதல் 10.10.59 வரை ரிஷபம் லக்னம். இந்த நேரத்தில் பிறந்தவர்கள் ரிஷபம் லக்னம் கொண்டிருப்பர்.

இப்படி லக்னம் ஒவ்வொரு 120 நிமிடங்களுக்கு ஒரு ராசி என மாறிக் கொண்டே இருக்கும்.


கவணம்

திங்களின் முதல் நாளில் 2 மணி நேரம் நீடிக்கும் முதல் லக்னம் இரண்டாம் நாளில் ஒரு பாகை அளவு குறைந்து விடும்.

அதாவது 116 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். அவ்வாராக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பாகை என குறைந்து வரும்.

திங்களின் 15 ஆம் நாள் அளவில் திங்களுக்கான ஞாயிறு எழும் லக்னம் பாதி அளவில் தான் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, சித்திரை முதல் நாள் 2 மணி நேரம் நீடிக்கும் முதல் லக்னம், மறு நாள் ஒரு பாகை குறைந்து 116 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிறது. ஒரு நாளுக்கு ஒரு பாகை அளவு என குறைந்து வந்தால் 16 ஆம் நாள் காலை ஞாயிறு தோன்றி வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே அந்த முதல் லக்னம் நீடிக்கும்.


மீதமுள்ள அந்த முதல் லக்னத்தின் நேரம் என்ன ஆகும்?

நம் சோதிடத்தின் படி, ஞாயிறு தோன்றி மறைந்து மீண்டும் தோன்றும் நேரம் வரை ஒரு நாள் என கொள்கிறோம்.

இந்த ஆண்டு சித்திரை 1-ஆம் நாள் ஞாயிற்று கிழமை என்றால், அது முடிவடைவது திங்கள் காலை ஞாயிறு தோன்றும் நேரமான 06.11 மணிக்குத்தான்.

திங்களுக்கான முதல் லக்னம், பின்னோக்கி நகர்கிறது என கொள்ளலாம்.

சித்திரை 1 ஆம் நாள் 06.11 மணிக்கு துவங்கும் மேஷ லக்னம், சித்திரை 16 ஆம் நாள் வாக்கில் ஞாயிறு எழும் நேரம் 06.04 மணி என்பதால், 05.04 மணிக்கு துவங்கி 07.03.59 மணிக்கு நிறைவடையும்.

அப்படியானால் சித்திரை 16 ஆம் நாள் 05.04 மணிக்கு துவங்கி 07.03.59 மணி வரை பிறந்தவர்கள் மேஷம் லக்னம் கொண்டிருப்பர்.

இப்படி ஒரு நாளில், ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் (120 நிமிடங்கள் அல்லது 30 பாகை) லக்னம் மாறிக் கொண்டே இருக்கும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading