சனி என்கிற காரி பெயரை கேட்டாலே அச்சம் பலருக்கு ஏற்பட்டு விடும். அதே போல சனி பெயற்சி குறித்த செய்தி வருகிறது என்றால் பல இராசிக்காரர்கள் உடல் நடு நடுங்கிப் போய்விடுகிறார்கள்.
இந்த காரி கோளின் ஏழரை ஆண்டு பயண சுழற்சி குறித்து தெரிந்து கொண்டால் அச்சம் என்பது மடமை என்று புலப்படும்.
முதலில் இந்த காரி கோள் வீற்றிருக்கும் இடத்தை பொருத்து பலன்களை கணக்கிட வேண்டுமாயின்:
காரி இருக்கிற விண்மீன் முதல் நமது பிறப்பு விண்மீன் வரை எண்ண வேண்டும்.
அப்படி எண்ணினால், அது 1, 2 அல்லது 3 என்று வந்தால் இது ஆடு என்று பொருள். இதன் பலன், அச்சம், செல்வம் சீரழிவு, நொடிப்பு
4, 5, 6 அல்லது 7 என்று வந்தால் அது குதிரை. இதன் பலன், மகிழ்சி, வெற்றி, நினைத்தது நடக்கும்.
8, 9, 10, 11, 12 அல்லது 13 என்று வந்தால், ஆடு. இதன் பலன் தோல்வி. செல்வம் இழப்பு. நொடிப்பு.
14, 15, 16, 17 அல்லது 18 என்றால் யானை. இதன் பலன் எதிர்பாரா வெற்றி. வருவாய் பெருகும். அறியாதவர்கள் கூட தாமாக வந்து உதவுவர்.
19 அல்லது 20 என்றால், எருமை. இதன் பலன் தீயதுடன் கலந்த நல்லவை. அதாவது தீங்கும் ஏற்படும். நல்ல செயல்களிம் நிகழும்.
21 அல்லது 22 அல்லது 23 என்று வந்தால் அது பறவை. இது அரசனுக்குறிய வாழ்வை குறிக்கும். பெருமழவில் நன்மைகள் வந்து குவியும்.
24 அல்லது 25 என்று இருந்தால் அது எருது. இந்த நாட்களில் உடல் நலம் நன்றாக இருக்கும். உழைக்க தோதான நாட்கள் இவை.
26 அல்லது 27 என்றால் இது காகை - காக்கா. இதனால் மன கலக்க்ம உண்டாகும். வருவாய் இழப்பு ஏற்படும்.