ADVERTISEMENT

ராசிகளும் அவற்றின் வகைப் பிரிவுகளும்

ராசிகளும் அவற்றின் வகைப் பிரிவுகளும் ராசிகளும் அவற்றின் வகைப் பிரிவுகளும்

ராசிகள், சரம் - ஸ்திரம் - உபயம் என வகைப்படுத்தி இருப்பது நம்மில் பலரும் அறிந்து இருக்கும் நிலையில், ராசிகளில் ஆண் ராசி, பெண் ராசி எனவும் ஆருட வல்லுநர்கள் வகைப்படுத்துகின்றனர்.

மேலும் ராசிகள், நெருப்பு ராசி, நில ராசி, காற்று ராசி, நீர் ராசி எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வகைக்கும் ஒரு குணம் என கணித்து, அதற்கு ஒப்ப ஆருட பலன் கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சர, ஸ்திர, உபய ராசிகள்:


சர ராசிகள்

‘சரம்’ என்கிற வடசொல்லிற்க்கு பொருள் இயங்கிக் கொண்டே இருப்பது - அதாவது, ஒரு நிலையில் நிற்காத தன்மை கொண்டிருப்பது. மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை இயங்கிக் கொண்டே இருக்கும் ராசிகளாகும். நகரும் தன்மையை கொண்டிருப்பதால் இடப்பெயர்ச்சியை தந்து கொண்டே இருக்கும்.

எண்ணம் சீராக இருந்தாலும் செயல்படுத்த முடியாத தன்மை இந்த இராசிக்காரர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும்.

4-ம் வீட்டு உரிமையாளர் அல்லது 4-ல் நின்ற கோள், சர ராசியாக இருந்தால் 60 வயது வரை வாடகை வீட்டிலேயே குடியிருக்கும் நிலை இருக்கும். அத்துடன் அடிக்கடி வீடு மாறிக் கொண்டே இருப்பார்கள்.

ஸ்திர ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள்.

வாழ்நாள் முழுவதும் தமதான வீட்டிலேயே இருப்பவர்கள், சொத்துக்கள் குவிந்து கொண்டே இருப்பது, சொத்துக்கள் மூலம் நிலையான வருமானம் கிடைப்பது, பல அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள், இவர்களின் செயல்பாடுகள் சிந்தித்து, பொருமையாக, தன்னம்பிக்கையுடனும் இருக்கும்.

உபய ராசிகள்


மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும்.  உபயம் என்றால் ஒரே நிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள்.  ஒரே நிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது என்பது இரு தன்மைகளையும் குறிக்கும்.

உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள் இவர்கள்.

அதனால் சொத்து வாங்குவதும், விற்பதும் இவர்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கும். வாடகை வீட்டில் இருந்து உரிமையான வீட்டிற்கு சென்றால், அங்கு ஒரு நிலையில் இல்லாது. உரிமையான வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கும் பெயர்வார்கள்.

ஆண் மற்றும் பெண் ராசி:


ஆண் ராசிகள்

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய இந்த ஆறு ராசிகளும் ஆண் ராசி என்று குறிப்பிடப்படுகின்றன.

ஆண் ராசியினர் மனவலிமை பெருமளவில் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வலிமையான தோற்றத்துடன் இருந்தாலும், இவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உடல் கோளாறுகள் இருந்து கொண்டே இருக்கும்.

பெண் ராசிகள்

ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் என இந்த 6 ராசிகளும் பெண் ராசிகளாகும்.

பெண் ராசியினருக்கு மன அழுத்தம் என்றென்றும் அவர்களுடனேயே வாழும்.

நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசி:


நெருப்பு ராசிகள்:

மேஷம், சிம்மம், தனுசு

நில ராசிகள்:

ரிஷபம் ராசி, கன்னி ராசி, மகரம் ராசி

காற்று ராசிகள்:

மிதுனம் ராசி, துலாம் ராசி, கும்ப ராசி

நீர் ராசிகள்:


கடகம், விருச்சிகம், மீனம்


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading