தற்பொழுது, பிறந்த நாள் என்றால், கிரிகோரி நாள்காட்டி முறையில் வரும் நாளில் பிறந்த நாளை கணக்கிட்டு கொண்டாடுகிறார்கள்.
ஆனால், 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன், ஒருவர் பிறந்த திங்களில் வரும் பிறந்த விண்மீனை கணக்கில் கொண்டு பிறந்த நாள் கொண்டாடி வந்தனர்.
அவ்வாறு அந்த நாளில் பிறந்த நாளை கணக்கில் கொண்டு, கோவிலுக்கு சென்று கடவுளை அந்த நாளில் வழிபட்டு வந்ததால் மனதில் அமைதி, அன்பு மற்றும் உறவு முறைகள் வளர்ந்து வந்தது.
மேலும் அந்த நாளில், ஒருவர் பிறந்த பொழுது கோள் அமைப்பு எப்படி அமையப்பெற்றிருந்ததோ அதே மாதிரியான ஒரு அமைப்பு இருக்கும்.
இவ்வாறு கணக்கிட்டு பிறந்த நாள் கொண்டாடியதால் எல்லா வளமும் பெற்று மக்கள்
மன அமைதியான நல் வாழ்வு வாழ்ந்தார்கள்.
பிறப்பு விண்மீன் கணக்கிட்டு, பிறந்த நாள் அன்று மட்டுமே கோவில் சென்று வழிபட்டால் பயன் என்பது அல்ல. ஒவ்வொறு திங்களிலும், ஒருவரின் பிறந்த விண்மீன் வரும் நாளில் கோவிலுக்கு சென்று குல தெய்வ வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் மன அமைதியும், எல்லா வளமும் பெற்று நீடூழி வாழலாம்.
பழைய ஊழிகளில், அவ்வாறு பிறந்த விண்மீன் தோன்றும் நாளில் ஒருவர் கடவுளை வேண்டுகிறார் என்றால் அவர் வேண்டும் வரங்களை குல தெய்வங்கள் தந்தே தீர வேண்டும் என வாணுலக விதி உள்ளதாக நம்பினார்கள்.
மேலும், அந்த நாளில், கோவிலிலில் காணிக்கை செலுத்தாமல், அவரவர் குல தெய்வத்தை மனதில் நிறுத்தி ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வந்தால் பிள்ளைகள் கல்வியில் சிறந்தோங்கும்.