ஜாதகரின் ஜாதகத்தை வைத்து, என்ன வகையான யோகங்கள் அமைந்திருக்கின்றன என்பதை எளிதில் கணித்துக் கொள்ளலாம்.
யோகங்களை கணிக்கும் பொழுது, இவ்வகையில் பிரித்துக் கணிப்பார்கள் :
முதலாவதாக, கோள்கள் ஒன்றுக்கொன்று ராசியில், அதாவது 1, 4, 7, 10-ஆம் இடங்களில் இருந்தால் ஏற்படும் யோக அமைப்புகளை கணிப்பது.
இரண்டாவதாக, கோள்கள் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில், அதாவது 1, 5, 9 இடங்களில் இருந்தால், அதற்கு ஏற்ப ஏற்படும் யோக அமைப்புகளை கணிப்பது.
மூன்றாவதாக, கோள்கள் ஒன்றுக்கொன்று, நேருக்கு நேர், அதாவது, 1, 7 -ஆம் இடத்தில் இருந்தால், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து கணிப்பது.
நான்காவதாக, இரண்டுக்கும் மேற்பட்ட கொள்கை, ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பது, இதை கோள்களின் சேர்க்கை என்பார்கள், இந்த சேர்க்கையினால் ஏற்படும் யோக பலன்கள் குறித்து கணிப்பது.
ஐந்தாவதாக, ஒரு கோள் தனக்கான வீட்டில் இல்லாமல், மாற்றி இருக்கும் அமைப்பு. இதை கோள்களின் பரிவர்த்தனை என்கிறார்கள். கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்த கணிப்பு.
ஆறாவதாக, ஒரு கோள் வீற்றிருக்கும் ராசிக்கு, முன்னும் பின்னும், இருக்கும் பிற கோள்கள் குறித்து அறிவது. அதாவது ஒரு கோளின், 2 மற்றும் 12ஆம் வீட்டில் இருக்கும் கோள்கள் குறித்து யோகபலன் கணிப்பது.
ஆறு வகைகளில் யோக பலன்களை கணித்தாலும், 300 யோக பலன்களுக்கும் மேலாக உள்ளது என கணக்கிட்டாலும், ஜாதகரின் தசா புத்தி அமைப்பை பொறுத்துதான் ஜாதக யோக பயன்கள் முழுமையாக கிடைக்கும்.