நாள் காட்டியை பார்த்தால், அதில் வடக்கே சூலம், தெற்கே சூலம் என்று குறித்திருப்பார்கள். அப்படியானால் சூலம் எதற்காக பார்க்கப்படுகிறது, அதனால் பயன் என்ன?
பொதுவாக சூலம் என்றால் அதனுடன் ஒரு திசையும் குறிக்கப்படும். அதை வைத்தே அது ஏதோ பயணம் தொடர்பானது என்பதை நமது அடிப்படை அறிவு விளக்கிவிடும். சரி... பயணத்தின் போது இந்த சூலம் பார்க்கவேண்டும் என்றால், பல நேரங்களில் நாம் அன்றாடம் அலுவலகம் நோக்கி பயணிக்கும் திசையும் இடம்பெற்றுருக்குமே!!! என்ன செய்வது?
பயணம் மேற்கொள்ளப் பார்க்கப்படுவது தான் சூலம் என்று ஐந்திறன் நாள் காட்டியில் சொல்லப்பட்டிருக்கிறது.
பயணம் என்றால், நாள் தோறும் மேற்கொள்ளும் சிறு தொலைவு பயணம் அல்ல. இது நெடுந்தொலைவு பயணம் மேற்கொள்வதற்கான ஒரு குறியீடு தான் இந்த சூலம்.
எடுத்துக்காட்டாக ஞாயிறன்று மேற்கு, வடமேற்கு பயணம் மேற்கொள்ளும் போது நாழிகை 12 என்றால் நேரக் கணக்கு பார்த்தால் சரியாக 5 மணி நேரம் வரும்.
அதாவது ஞாயிறு தோன்றி முதல் ஐந்து மணி நேரத்திற்குள் மேற்கு, வடமேற்கு நோக்கி பயணம் துவக்குவதை தவிர்ப்பது நல்லது.
அதாவது, மேற்கு, வடமேற்கு தவிர்த்த பிற திசைகளில் பயணம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் துவக்கலாம். திசை குறிக்கப்பட்ட திசை நோக்கி பயணம் அமைவதாக இருப்பின், நேரம் சற்று தாழ்த்தி துவங்குவது சிறப்பு.
பயணம் துவங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள், வெல்லம் சாப்பிட்டு கிளம்பலாம். (விமானத்தில் மேற்கு நோக்கி புறப்பட வேண்டும் என்றால், சூலம் பார்த்து நேரம் தாழ்த்தவா முடியும்?)
அதே போன்று, வியாழனன்று தெற்கு, தென்கிழக்கு திசையில் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் 20 நாழிகை, அதாவது ஞாயிறு தோன்றி சரியாக 8 மணி நேரத்திற்கு பயணத்தை துவக்கக் கூடாது.
8 மணி நேரம் முடிந்த பின்பு செல்லலாம்.
சிறு தொலைவு பயணம் மேற்கொள்பவர்கள் சூலம் பார்க்க முற்றிலும் தேவை இல்லை.