பொதுவாக இரண்டாம் லக்ன வீடு என்பது, வருவாய் மற்றும் பேச்சு திறனுக்கான வீடு என்று அழைக்கப்படும்.
இதில் ஞாயிறு இருப்பின் சாதகன் பொய் பேசுபவராக இருப்பார். அப்படி இல்லை என்றால் திக்கி பேசும் தன்மை கொண்டவராக இருப்பார். பொதுவில் இவர் ஒரு கருமையான வாக்கு சண்டை கொண்டவராக இருப்பார்.
நிலவு: நல்ல படிப்பு, கல்வி அறிவு கொண்டவராவார். உடல் நலம், ஒழுக்கம், நற்பலன்கள் உண்டாகும்.
செவ்வாய்: முன்கோபியாகவும், கடுமையான வாக்கு உடையவராகவும் திகழ்வார்.
அறிவன் (புதன்): அருமையான குடும்பம் கொண்டவராக வாழ்வார். சொன்ன சொல் தவரமாட்டார். செல்வத்துடன் வாழ்வார்.
வியாழன் (குரு): நல்ல குடும்பம், செல்வ செழிப்பு, உயர் கல்வி, பேச்சுத்திறன் கொண்டவர்.
வெள்ளி (சுக்): நீண்ட ஆயுள், செல்வ செழிப்பு, நல்ல வாழ்க்கை துணை உண்டாம்.
இராகு: இராகு இருப்பின் கடுமையான சொல் பேசுபவராகவும், தன் மரியாதை காப்பவராகவும், கண்ணில் மச்சம் கொண்டவராகவும், பேச்சில் சற்று தினருபவராகவும் திகழ்வார்.
கேது: கடுமையான சொல் பயன்படுத்துவார். வீண் சண்டைகள் இவரை விடாது. திக்குவாய் ஏற்படலாம். கண் நோய் கொண்டவராக இருப்பார். செல்வம் தானாக வந்து குவியும். செலவு செய்வதில் தயக்கம் காட்ட மாட்டார்.