ADVERTISEMENT

துலாம் லக்னக்காரர்களின் வருவாய் எப்படி இருக்கும்?

துலாம் லக்னக்காரர்களின் வருவாய் எப்படி இருக்கும்? துலாம் லக்னக்காரர்களின் வருவாய் எப்படி இருக்கும்?

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வருவாய்க்கான தலைவர் நிலவு.  இவர் தனித்தனியாக ஒரு வீட்டிற்கு உரிமை கொண்டவரும் ஆவார்.  நிலவு, நீர் தொடர்புடைய கோள் என்பதால், அவரின் பிற கோள் சேர்க்கையைப் பொருத்து, ஜாதக காரரின் கடல்கடந்த வருவாய் ஈட்டும் திறன் கிடைக்கும்.

நிலவு ஆட்சி உச்சம் பெற்று, வியாழன் போன்ற நற்பயன் பயக்கும் கோள்களுடன் சேர்க்கை அல்லது நட்பு கோள்களின் வீடுகளில் அமையப் பெறுமேயானால், அந்த ஜாதகர் சமூகத்தில் பெருமைக்குரிய வாழ்க்கை வாழக்கூடிய அற்புதமான அமைப்பு கிடைக்கும்.

துலாம் லக்னத்திற்கு 9 மற்றும் 12 இருக்கு உரிமையாளராக விளங்கக்கூடிய அறிவன் நிலவுடன் சேர்க்கை பெற்று, ஒன்பது அல்லது பன்னிரண்டு அமர்ந்தால் அந்த ஜாதகர் கடல் கடந்து வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டு பெருமளவில் செல்வம் ஈட்டி செல்வ செழிப்பான வாழ்க்கை அமைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாழன் மற்றும் நிலவு ஆட்சி உச்சம் பெற்று 10-ஆம் வலுவாக அமையப் பெற்றால், இந்த ஜாதகக்காரர் அரசு அல்லது அரசு சார்ந்த பணிகளில் உயர்வான பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

வியாழன் அல்லது நிலவு வலுப்பெற்று, காரி (சனி) அல்லது அறிவன் (புதன்) வீட்டில் இருந்தால், அரசு பதவிகளில் உயர்வான பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

நிலவின் நட்பு கோள்களான ஞாயிறும் வியாழனும் வலுப்பெற்று அமைந்து இருந்தால் அந்த ஜாதகர் அரசுத்துறைகளில் பணிபுரிவார்.

பொதுவாக, துலாம் லக்னக்காரர்கள், நிலவு தனித்து ஆட்சி பெற்று வலுவாக அமைந்திருந்தால் அவர்கள் கடல் அல்லது நீர்நிலை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு செல்வ செழிப்பில் வாழ்வார்கள்.

ஞாயிறு மற்றும் செவ்வாய், பத்தில் வலுப்பெற்று இருந்தால், ஜாதகக்காரர் அரசுத்துறைகளில் பணிபுரிவது மட்டுமல்லாது நல்ல மேலாண்மை திறனுடனும் விளங்குவார்.

வியாழன் 10-ல் வலுப்பெற்று இருந்தால் ஜாதகக்காரர் பிறருக்கு அறிவுரை கூறும் தொழில்களான வழக்கறிஞர் - ஆசிரியர் போன்ற பணிகளில் அமர்வார்.

வெள்ளி வலுப்பெற்று அதனுடன் நிலவு 10ல் அமையப் பெற்றால், ஜாதகக்காரர் கலை, இசை, திரைத்துறை போன்றவற்றில் தமது பணியை அமர்த்திக் கொண்டு அதன் மூலம் செல்வம் ஈட்டுவார். அதேபோன்று, நிலவு மற்றும் செவ்வாய் வலுப்பெற்று, 10ல் அமையப் பெற்றால் கலைத்துறையில் தமது வருவாய் அமையும்படி ஈடுபடுவர். இத்தகைய அமைப்பு கொண்ட சிலர் கட்டிடம் கட்டி விற்றல், நிலம் வாங்கி விற்பது போன்ற தொழில்களில் ஈடுபடுவர்.

அறிவன் 10ல் வலுப்பெற்று அமைந்து, அதன்மீது வியாழனின் பார்வை இருக்குமேயானால், ஜாதகக்காரர் கணினி, கணிதம், பட்டய கணக்காளர் போன்ற அறிவு சார்ந்த தொழிலில் ஈடுபடுவர்.

அறிவன் நிலவுடன் சேர்க்கை பெற்று 10ல் கேது சேர்ந்தால், லக்கினக்காரர் மருந்து - வேதியல் - உரம் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுவர்.

நிலவு ஆட்சி உயர்வு பெற்று, நற்பயன் பயக்கும் கோள்களுடன் அமைந்து, பத்தாம் வீட்டில் வியாழனின் பார்வையும் கிடைக்கப்பெற்றால் லக்கினக்காரர்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கும்.

நிலவு வலுவிழந்து, காரி பத்தாம் வீட்டில் அமைந்தால் அல்லது ராகு போன்ற தீய பலன் பயக்கும் கோள்கள் பத்தாம் வீட்டில் அமையப் பெற்றாலும், பிறருக்கு கீழ் பணி செய்யக்கூடிய நிலையும், சட்டத்திற்கு எதிரான தொழில் செய்து வருவாய் ஈட்டக்கூடிய சூழலும் உண்டாகலாம்.

காரியின் பார்வை பத்தாம் வீட்டில் இருந்தாலும் அல்லது நிலவின் மீது காரியின் பார்வை இருந்தாலும், தொழில் ரீதியாக போராட்டங்களை வாழ்நாள் முழுவதும் எதிர்நோக்கும் நிலை ஏற்படும்.

நிலவு தேய்பிறை நிலவாக இருந்து, காரி - ராகு போன்ற தீய கோள்களின் சேர்க்கை பெற்றால் நிலையற்ற தொழில் அமைந்து, வாழ்க்கை அல்லல்படும் நிலையில் இருக்கும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading