அறிவன் தசையில், முதலில் துவங்குவது அறிவன் புக்தி. அதை தொடர்ந்து கேது, வெள்ளி என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி விண்மீன்கள் அறிவன் தசையை முதலாவதாக கொண்டிருக்கும். அறிவன் தசையின் மொத்த நேர அளவு 17 ஆண்டுகள்.
அறிவன் தசையில் புக்திகளில் நேர அளவு:
அறிவன் 2 ஆண்டு 4 திங்கள் 27 நாள்
கேது 11 திங்கள் 27 நாள்
வெள்ளி 2 ஆண்டு 10 திங்கள்
ஞாயிறு 10 திங்கள் 6 நாள்
வெள்ளி 1 ஆண்டு 5 திங்கள்
செவ்வாய் 11 திங்கள் 27 நாள்
இராகு 2 ஆண்டு 6 திங்கள் 18 நாள்
வியாழன் 2 ஆண்டு 3 திங்கள் 6 நாள்
காரி 2 ஆண்டு 8 திங்கள் 9 நாள்
1. அறிவன் புக்தி: சுற்றமும் துணையும் பலன் தரக்கூடிய பொருள் வருவாயும் பெரு செல்வம் சேர்க்கையும், நன்மையும்ன், அறிவும், ஆற்றலும், ஞானமும், நினைப்பதெல்லாம் கைகூடலும் நடைபெறும்.
2. கேது புக்தி: இடம் விட்டு இரம் பெயர்தல் நடைபெறும். நோய் நோக்காடுகள் வந்து விலகும். மன அமைதி கெடும்.
3. வெள்ளி புக்தி: பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும். பிற பாலினத்திடம் எச்சரிக்கை தேவை. பாலின ஈர்ப்பால் மயங்கும் வாய்ப்பு கூடுதல். நகை செல்வம் பொருள் சேரும். திருமணம் நடந்தேறும்.
4. ஞாயிறு புக்தி; நெருப்பை தொடாதீர்கள். வாழ்க்கை துணயை அன்புடன் நடத்துங்கள். அரசால் துன்பம் வரலாம்.
5. நிலவு புக்தி: கால்களில் பாதிப்பு உண்டாகும். பகை உண்டாகும். பிற பாலினத்தவர் பழக்கம் தவிர்த்தல் சிறப்பு. துன்பம் வந்து போகும். பகை பெருகி நிற்கும்.
6. செவ்வாய் புக்தி: தலைவலி உண்டாகும்ன். முன் பின் அறியாதவரிடம் ஒதுங்கி இருப்பது நல்லது. பகை மேலும் பகையாக மாறும்.
7. இராகு புக்தி: இருக்கும் இடம் விட்டு இடம் மாறுவீர்கள். மனதில் அமைதி கெடும். உணவு உண்ண நேரம் கிடைக்காது.
8. வியாழன் புக்தி: இன்பம், மரியாதை, பதவி, மனதில் அமைதி, பகை நீங்குதல், உற்றார் உறவினர் உதவி, பிள்ளைகளால் நன்மை, புகழ், செல்வம் சேர்த்தல் என எல்லாம் நல்லவையாக நடைபெறும்.
9. காரி புக்தி: நல்லவை நடக்காவிட்டாலும், தீயது அன்டாது. பகை வந்தாலும் உடனடியாக நீங்கும். மன அமைதி இல்லாவிட்டாலும் துன்பம் தோன்றாது.