ஆருடம் கணிக்கும் பொழுது மொத்தம் 27 விண்மீன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 27 விண்மீன்கள் என்று குறிப்பிடும் பொழுது, ஒவ்வொன்றும் ஒரே ஒரு விண்மீன் என நம்மில் பலர் கருத வேண்டிய நிலை இருக்கிறது. 27 விண்மீன்கள் என்பது ஒவ்வொரு விண்மீனாக எண்ணி 27 விண்மீன் என்று கருதக்கூடாது. ஆருடத்தை பொருத்தவரை, விண்மீன் குடும்பங்கள், விண்மீன் என எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
தெளிவாகச் சொல்வதானால்,
அசுவினி, பரணி, மிருகசீரிடம், பூசம், விசாகம், அனுசம், கேட்டை, திருவோணம், ரேவதி - ஆகிய விண்மீன்கள் ஒவ்வொன்றும், மூன்று விண்மீன்களைக் கொண்டவை.
கார்த்திகை, ஆயில்யம் - ஆகிய இந்த இரண்டும் ஆறு விண்மீன்களைக் கொண்டவை.
பூரம், உத்திரம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி - ஆகியவை 4 விண்மீன்களைக் உள்ளடக்கியவை.
ரோகினி, புணர்பூசம், மகம், அத்தம் - ஆகியவை ஐந்து விண்மீன்களைக் கொண்டவை.
மேற்சொன்ன இந்த 20 தவிர்த்த பிற ஏழு விண்மீன்கள், ஒவ்வொன்றும் தனித்தனியானவை.
இந்த இருபத்தி ஏழு விண்மீன்களும், 360 டிகிரியில் அடங்கி நிற்பதாக ஆருடம் கணிக்கிறது.
அதில் மொத்தம் கொடுக்கப்பட்டுள்ளது 12 ராசிகள் என்பதால், இந்த 27 விண்மீன்களும், ராசி ஒன்று இருக்கு 2.25 என்ற வகையில் பிரித்து கணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு விண்மீனுக்கும் 4 நிலைகள் (பாதம்) கொண்டதாக ஆருடம் கணிக்கிறது.
360 டிகிரியில், ஒரு விண்மீன் 13 டிகிரி மற்றும் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. அப்படியானால், ஒரு நிலை என்பது, 3 டிகிரி மற்றும் 20 நிமிடங்களைக் கொண்டதாகும்.
மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் ஆருட கணிப்பு, ஞாயிறின் நிலைக்கு ஒத்த கோள்களின் நிலை மற்றும் விண்மீன்களில் நிலையை கொண்டு கணிப்பாகும். இந்திய ஆரூடத்தில், நிலவை அடிப்படையாகக் கொண்டு கோள்களின் நிலை மற்றும் விண்மீன்களின் நிலை, ஆருடம் கணிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.