ADVERTISEMENT

பாபசாம்யம் என்றால் என்ன?

பாபசாம்யம் என்றால் என்ன? பாபசாம்யம் என்றால் என்ன?

பாபசாம்யம் என்றால் என்ன?

பாபசாம்யம் என்றால், ஒரு சாதகரின் சாதகத்தில் உள்ள கோள்களின் பழிப்பு நிலையின் அளவு எந்த அளவில் உள்ளது என்பதை அதற்கான கணக்குகளைப் போட்டு முடிவு செய்ய ஆருட சட்ட முறைகளில் சொல்லப் பட்டுள்ள ஒரு வழிமுறை ஆகும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ஆண்,பெண் ஆகியோரின் ஜாதகங்களில் உள்ள தோஷம் என்று சொல்லப்படுகிற பழிப்பு நிலையை துல்லியமாக கணக்கிட்டு, அதன் பின் பிறப்பு சாதகங்களை ஒப்பிட்டு, திருமணம் செய்யலாமா கூடாதா என்று தீர்மானம் செய்ய உதவும் ஓர் அடிப்படை தான் இந்த பாபசாம்யம்.

இதனை பாப தோஷ சாம்யம் என்றும் சொல்வதுண்டு.

பாபசாம்யதின் விளக்கம்


ஆருடத்தின் கணக்கின் படி, காரி (சனி), ராகு, கேது, செவ்வாய், ஞாயிறு ஆகிய கோள்கள் கெடுதல் செய்யக்கூடிய கோள்கள்.

இந்த ஐந்து கோள்களும் ராசி சக்கரத்தில் லக்னம், நிலவு, வெள்ளி (சுக்) இருக்கும் வீடுகளிலிருந்து, 1- 2- 4- 7- 8- 12 வது இடங்களில் காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு இந்த கோள்களால் பழிப்பு ஏற்படக்கூடும்.

இந்த கோள்கள்  1- 2- 4- 7- 8- 12 வது இடங்களில் உச்சம் அல்லது நீசம் அல்லது, நட்பு அல்லது பகை அல்லது ஆட்சி அல்லது சரினேர் என்ற நிலையை பொருத்து பழிப்பின் வலிமை இருக்கும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது காரி,  ராகு, கேது, செவ்வாய், ஞாயிறு கொடுக்கும் தோஷங்கள், யாருக்கு பெரும் அளவில், பெண்ணிற்கா, ஆணிற்கா என்று பார்க்கும் போது, பெண்ணின் தோஷம் பெருமளவில் இருந்தால் பாபசாம்யம் விரும்பும் நிலையில் இல்லை என்று முடிவு செய்யப்படும்.

ஆணின் தோஷம், பெண்ணை விட கூடுதலாகவோ அல்லது நேர்னிலையிலோ காணப்பட்டால், திருமணப் பொருத்தம் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

பாபசாம்யம் ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கம்:

பாபசாம்யம் கணக்கிட 5 முறைகள் உள்ளன.

1. நேர்நிலை புள்ளி - நேர்நிலை மதிப்பு

2. நேர்நிலை புள்ளி - வேறுபாடுடைய மதிப்பு

3.வேறுபாடுடைய புள்ளி - நேர்நிலை மதிப்பு

4. புள்ளி வேறுபாடு - மதிப்பு வேறுபாடு

5. புள்ளி கணக்கிடும் முறை - கோள்களின் நட்புனிலை மற்றும் அவற்றின் மதிப்பு நிலையை பொருத்து.

இப்போது ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்.

Point System considering planetary Friendship and positional strength.


பெண்
ஜாதகம் லக்னத்திலிருந்து
ராசியில் கிரகங்கள்

ஆண் ஜகதகம்
லக்னத்திலிருந்து
தோஷம்; நிலை இடம்
இடம் நிலை தோஷம்;
24 உச்சம் 12y; சனி 1 பகை 112
96 உச்சம் 7 ராக 3 நட்பு ---
96 உச்சம் 1 கேது 9 நட்பு ---
168 பகை 8 செவ்வாய் 9 நட்பு ---
36 சமம் 8 சூரியன் 11 பகை ---

சந்திரனிலிருந்து


சந்திரனிலிருந்து
---- உச்சம் 5 சனி
3 பகை ---
12 உச்சம் 12 ராகு 5 நட்பு ---
--- உச்சம் 6 கேது 11 நட்பு ---
84 பகை 1 செவ்வாய் 11 நட்பு ---
18 சமம் 1 சூரியன் 1 பகை 28

சுக்கிரனிலிருந்த


சுக்கிரனிலிருந்து
--- உச்சம் 3 சனி
5 பகை ---
24 உச்சம் 8 ராகு 7 நட்பு 8
06 உச்சம் 4 கேது 1 நட்பு 8
--- பகை 9 செவ்வாய் 1 நட்பு 12
--- சமம் 9 சூரியன் 3 பகை ---
564 564 ஐ 128 ஆல் வகுக்க

4.4 தோஷம்
பெண்ணிற்கு


168ஐ 128 ஆல் வகுத்தால்

1.31 தோஷம் ஆணுக்க
168

இந்த முறையில் ஆணின்
தோஷத்தை விட பெண்ணிற்கு தோஷம் குறைவாக இருக்க வேண்டும். அல்லது சமமாக
இருக்க வேண்டும். அப்போது தான் திருமண வாழ்க்கை நலமாக அமையும். இந்த
உதாரணத்தில் பெண்ணுக்கு தோஷம் அதிகமாக இருப்பதால் திருமணம் செய்யக் கூடாது.


ஜோதிடர்கள் அவர்களது
பழக்கத்திற்கு தகுந்தவாறு இந்த 5முறைகளில்
ஏதாவது ஒரு முறையில் பாபசாமியத்தை கணக்கிடுவார்கள்.



Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading