ADVERTISEMENT

ஆண் அல்லது பெண் ஜாதகம் இணைப்பால், செல்வம் கூடுமா?

ஆண் அல்லது பெண் ஜாதகம் இணைப்பால், செல்வம் கூடுமா? ஆண் அல்லது பெண் ஜாதகம் இணைப்பால், செல்வம் கூடுமா?

ஆணிற்கும் பெண்ணிற்கும், திருமணம் ஏற்பாடு செய்யும் பொழுது, வீடுகளில் ஏதாவது ஒரு நிகழ்வு ஏற்பட்டால், அத்தகைய நிகழ்வு, அந்த வீட்டிற்கு வர ஏற்பாடாகி இருக்கிற ஆண் அல்லது பெண் ஜாதக இணைப்பால் ஏற்படும் வினை, என நாம் பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.

இன்னும் பல நேரங்களில், குழந்தை பிறந்த நேரத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு, குழந்தையின் ஜாதக அமைப்பை ஒரு அடிப்படையாகக் கூறுவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

உண்மையில்,  ஆண் - பெண் திருமண ஏற்பாடுகள் அல்லது திருமணம் முடித்தல் அல்லது குழந்தை பிறத்தல், என எதுவும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு பொறுப்பாகாது என்பதுதான், ஆருட வல்லுனர்களின் ஒருமித்த கருத்து.

கணவர் அல்லது மனைவி ஜாதக சேர்க்கையால், நன்மை அல்லது தீமை ஏற்படப்போகிறது என நினைப்பதே தவறு.  பிறக்கப்போகும் குழந்தை, ஒருவருக்கு செல்வச் செழிப்பை ஏற்படுத்தித் தரும் என ஒருவர் நினைக்கிறார் என்றால், அதைவிட மூடத்தனம் வேறு எதுவும் இல்லை.

தெள்ளத் தெளிவாகச் சொல்வதானால், ஒருவரின் வாழ்க்கை நிலை, அவரவர் தம் ஜாதக அமைப்பு மட்டுமே ஏற்படுத்துகிறது.  அந்த அமைப்பு அவர் முற்பிறப்பில் செய்த நன்மை தீமையை பொருத்தும், இப்பிறப்பில் செய்கின்ற நன்மை தீமைகளை பொருத்தும் அமையும்.

சிலர் உடனடியாக ஒரு கேள்வி கேட்கலாம், அதாவது, ஆணின் ஜாதகம் அமைப்பு பெண்ணின் உயிரைப் பறிக்கும் என்கிறார்கள், அதேபோன்று, பெண்ணின் ஜாதகம் அமைப்பு ஆணின் உயிரைப் பறிக்கும் என்கிறார்கள்.  அப்படியானால் ஆண் பெண் ஜாதகங்கள் ஒருவர் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது தானே?

இதற்கு விளக்கம் என்னவென்றால், ஒருவருடைய ஜாதக அமைப்பிலேயே, இத்தகைய கணவர் அல்லது இத்தகைய மனைவி அமைவார் என்று அமைந்திருக்கும்.  அப்படி இருக்கும் பொழுது, அப்படியான ஒரு நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்த, அப்படிப்பட்ட ஒரு ஜாதக அமைப்பு கொண்ட ஒருவர் தான் வாழ்க்கை துணையாக அமைவார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், ஒரு ஜாதகருக்கு, ஜாதக அமைப்பினால் ஏற்பட வேண்டிய வினை, ஒரு குறிப்பிட்ட சேர்க்கை வலுக்கட்டாயமாக ஏற்பட்டு, அதன் மூலம் அந்த வினை நடந்தேறுகிறதேயொழிய, வேறு எதுவும் அடிப்படை இல்லை.

அதாவது, வேறு ஒரு ஜாதகரின் ஜாதகத்தினால், வேறு ஒரு ஜாதகருக்கு நன்மையோ தீமையோ ஏற்படாது.  ஆனால், ஜாதகருக்கு ஏற்பட வேண்டிய நன்மை அல்லது தீமை, பிற ஜாதகரின் அமைப்பினால் ஏற்பட வைக்கிறது.

ஆகவே, மனித வாழ்க்கையில் நம்முடன் பயணிக்கும் பிற ஜாதகர்களை குற்றம் சொல்வதை தவிர்த்து விட்டு, நாம் நம் வாழ்வில் நற்பயன் தருபவர்களாக வாழ்வோம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading