திருமணம் தொடர்பான குறிப்பிடத்தக்க தோஷங்கள் மொத்தம் ஆறு.
அவை, செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் மற்றும் புத்திர தோஷம் என மொத்தம் ஆறு தொஷங்கள் உள்ளன.
திருமணம் என்றால், பெண்ணின் ஜாதகத்தை தீர ஆராய வேண்டும்.
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இருப்பின், ஆண் ஜாதகத்திலும் இத்தகைய நிலைய் இருந்த்ஹால் அவர்களை வாழ்வில் ஒன்றினைப்பது தான் சிறப்பு.
அதை விடுத்து அல்லது கவணிக்காமல் திருமணம் முடித்தால், ஆணின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
லக்னம், நிலவு, வெள்ளி (சுக்கிறன்) ஆகியவை வற்றிற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும்.
கவனிக்காமல் திருமணம் முடித்துவிட்டால், அதன் பாதிப்பை தீர்பதற்கு செவ்வாய் கிழமை நோண்பு இருந்து முருகனுக்கு வழிபாடு விடாமல் செய்து வர வேண்டும். அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை வழிபடுவது இன்னும் நல்ல பலனை தரும்.
இந்த ராகு, கேது ஆகிய இரு கோள்களால் ஏற்படும் தோஷங்களைச் பாம்பு தோஷம் - சர்ப்ப தோஷம் - நாக தோஷம் என்று அழைக்கின்றனர். ஒருவர் ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கோள்கள், இராசியின் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும்.
ராகு-கேது பிறப்பு இராசியில் ராகு ௪ல் அல்லது 10ல் மற்றும் கேது 4ல் அல்லது 10ல் அமர்ந்து ராகு-கேது தோஷத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பார்கள்.
இந்த தோஷம் தீர திருநாகேசுவரம், காளகஸ்தி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபடலாம். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம். முருகனை நாள் தோரும் வழிபட்டு வந்தால் குறிஞ்சியின் இறைவன் காப்பான்.
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் ஒன்றில் ஞாயிறு இருந்தால் அதுவே சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே போன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் தீரும்.
ஞாயிற்று கிழமை நோண்பு இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். நாள் தோரும் விடாமல் முருகனுக்கு பால் படையலிட்டு அதை ஏழை குழந்தைகள் அருந்த கொடுத்தால் இந்த தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
இராசியில் இன்பத்தை தரும் இடமாக என்னும் 7-ம் இடத்தில் புவி வாழ்வில் இன்பங்களை தருகிற வெள்ளி கோள் (சுக்கிரன்) இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல நல்ல பலன்கள் இருந்தாலும் திருமண வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும். அதனால் ஆண் பெண் இருவருக்கும் இந்த தோஷம் இருக்கிறதா என ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.
கனவருடன் நீண்ட நாட்கள் ஒற்றுமையுடன் வாழும் பெண்களுக்கு தட்டை துணி, தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு வழங்கி ஆசி பெற்றால் நல்லது நடக்கும். மேலும் பழமுதிர் சோலைக்கு தை திங்களில் 3 ஆவது வாரத்தில் வெள்ளிக் கிழமை சென்று வணங்கி வந்தால் இந்த தோஷத்தினால் ஏற்படும் பாதிப்பு நீங்கும்.
இந்த குறிப்பிட்ட தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், லக்னத்துக்கு 8 ஆம் இடத்தில் ஞாயிறு, ராகு, கேது, காரி (சனி) கோள்களில் ஏதாவது ஒன்று இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8 ஆம் இடத்தை நல்ல கோள்களுடன் சேர்ந்து வியாழன் (குரு) பார்த்தால் தோஷம் இல்லை என கொள்ளலாம். 8-ம் இடத்தில் இராசியின் இறைவன் பலம் பெற்றாலும் தோஷம் இல்லை எனலாம்.
இந்த தோஷம் இருப்பதாக கண்டறியப்பட்டது முதல் குல தெய்வ வழிபாட்டை விடாமல் ஆண்டு தோரும் முறையாக மேற்கொண்டு வரவேண்டும். தவரினால், அந்த குறிப்பிட ஆண்டு மூன்று அறுபடை வீடுகளுக்காவது சென்று முருகனை வழிபட வேண்டும்.
இராசி லக்னத்தில் 5 ஆம் இடம் பூர்வ புண்ணிய இடமாக திகழ்கிறது. தாய்மாமன், தாய் வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.
ஐந்தாம் இடத்தில் தீய கோள்களான ராகு, செவ்வாய், காரி (சனி) அல்லது ஞாயிறு அமைந்தால் குழந்தை பேரு இல்லாமல் போகும் அல்லது போராடி பெற வேண்டி இருக்கும்.
அதே வேளையில் 5ஆம் இடத்தில் உள்ள தீய கோள்களை நன்மை செய்யும் கோள்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் நன்மை செய்யும் கோள்கள் வேறுபடும்) குழந்தை வரம் கிடைக்கும். அதாவது புத்திர தோஷம் இல்லை எனலாம்.
லக்னத்தின் 5 ஆம் வீட்டிற்கு உரிய கோள் தீய கோளுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும்.
இந்த தோஷம் தீர வேண்டுமானால், பழனி முருகனை வீட்டின் சாமி அறையில் வைத்து நாள் தோரும் வழிபட வேண்டும்.