ADVERTISEMENT

எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?

எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்? எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?

எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம் என்ற கேள்வி, திருமண பொருத்தம் பார்க்கும் ஒவ்வொருவரும் கேட்பதாக உள்ளது.

எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?

திருமணம் பொருத்தம் பார்க்கும் பொழுது,


  1. தினம் பொருத்தம்,
  2. கணம் பொருத்தம்,
  3. யோனி பொருத்தம்,
  4. ராசி பொருத்தம் அல்லது மகேந்திர பொருத்தம்
  5. ரஜ்ஜூ பொருத்தம்


ஆகிய ஐந்து பொருத்தங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என சோதிடம் கூறுகிறது.

இந்த 5 அடிப்படை பொருத்தங்கள் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்து வைப்பது சிறந்ததாக இருக்காது.

பழைய நாட்களில் திருமண பொருத்தம் என்பது 20 பொருத்தங்களை பார்ப்பதாக இருந்தது.

அதன் பின், அது 11 ஆக குறுகியது.

தற்பொழுது நாம் 10 பொருத்தங்கள் பார்க்கிறோம்.

10 பொருந்துமா என்றால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. அப்படியானால் எந்தனை பொருத்தங்கள் தேவை என்ற கேள்வி எழுகிறது.

மேலே சொன்ன 5 பொருத்தங்கள் கண்டிப்பாக தேவை. அவைத் தவிர பிற பொருத்தங்களும் கூடி இருந்தால் சிறப்பு.


திருமண பொருத்தம் இருக்கிறது என்றால் அடுத்தது என்ன செய்ய வேண்டும்?


இணைய நிகழ் நிலை தளங்கள் மூலம் திருமண பொருத்தம் பார்த்து, பொருத்தங்கள் இருக்கிறது என்றால், அடுத்ததாக சோதிடரை சாதகத்துடன் சென்று பார்க்க வேண்டும்.

ஏனெனில், இந்த 10 பொருத்தங்களை தாண்டி,

செவ்வாய் தோஷம்
சர்ப்ப தோஷம்
புனர்பூ தோஷம்
மாங்கல்ய தோஷம்
ஷஷ்டாஷ்டக தோஷம்
துவி துவாதச தோஷம்


ஆகியவை குறித்த தெளிவு பெற வேண்டும்.

அடுத்து, சாதகத்தில்

குடும்ப இருப்பு,
பிள்ளை பேறு வாய்ப்பு இருப்பு
களத்திர இருப்பு
ஆயுள் இருப்பு

ஆகியவைகளையும் கண்டு ஆராய வேண்டும்.


திருமணம் பொருத்தம் பார்த்து முடிக்கும் திருமணங்கள் பல தோல்வியில் முடிகின்றனவே? என்ற குரலும் கேட்டுக்கொண்டு தான் உள்ளது.


நாம் பார்க்கும் அல்லது கணிக்கும் திருமணம் பொருத்தங்கள் ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கான பொதுவான பொருத்தங்களாகும்.

மனப் பொருத்தம் என்று ஒன்று உள்ளது. அது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன் பார்த்து அவர்கள் மனம் ஏற்று மனம் முடிப்பதாகும்.

சோதிடத்தின் படி கணிக்கும் எல்லா திருமண பொருத்தங்களை காட்டிலும் இந்த அடிப்படை மன பொருத்தம் இருந்தால் பிற பொருத்தங்கள் இல்லாவிட்டாலும் திருமண உறவு சிறக்கும்.


அப்படியானால் காதல் திருமணங்கள் மன பொருத்தம் ஏற்பட்டு தானே நடக்கிறது, அது ஏன் தோல்வியில் முடிகிறது?


காதல் திருமணங்களில் மன பொருத்தம் இருக்கிறது என்று சொல்வீர்களேயானால் அது முற்றிலும் தவறு.

அது இச்சையை அடக்க இயலாமல் விடலை பருவத்தில் மேற்கொள்ளும் ஆண் பெண் உடல் தேடல்.

அது வெற்று இச்சையால் ஏற்படும் கவர்ச்சி.  பள்ளி பருவத்து காதல், இள நிலை கல்லூரியில் ஏற்படும் காதல் எல்லாம் இவ்வகையே!

பொதுவாக காதல் திருமணங்கள் விடலை பருவத்து திருமணங்களாகத் தான் இருக்கும்.

இச்சை தீர்ந்தவுடன், புதிய இணை உடல் தேடுவதால் வரும் விணை தான் இந்த காதல் திருமணக்களின் தோல்வி.

விடலை பருவம் தாண்டி, அதாவது பெண் 21 வயது தாண்டி, ஆண் 24 வயது தாண்டி, அவர்களுக்குள் காதல் மலர்கிறது, அது திருமணத்தில் முடிகிறது என்றால் அது நிலைத்திருக்கு.

ஏன் என்றால் அது வெறும் உடல் கவர்வால் ஏற்பட்ட பினைப்பாக இருக்காது.

இது மனம் ஒத்த திருமணமாக இருக்கும்.


திருமண பொருத்தங்கள் பார்க்கத் தேவை இல்லை


35 வயதை தாண்டிய பெண்ணிற்கு இந்த திருமண பொருத்தங்கள் பார்க்கத் தேவை இல்லை.

அதே போல 40 வயதை தாண்டிவிட்ட ஆணிற்கும் திருமண பொருத்தம் பார்க்கத் தேவை இல்லை.

அப்படியே பார்த்தாலும் அது எவ்விதத்திலும் அவர்களின் திருமண வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading