எந்த தசை நடக்கிரதோ அந்த கோளின் புக்தியே முதலில் துவங்கும். இந்த விதியின் படி செவ்வாய் தசையில், முதலில் துவங்குவது செவ்வாய் புக்தி. அதை தொடர்ந்து இராகு, வியாழன் என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.
செவ்வாய் தசையில் புக்திகளில் நேர அளவு:
செவ்வாய் 4 திங்கள் 27 நாள்
இராகு 1 ஆண்டு 18 நாள்
வியாழன் 11 திங்கள் 6 நாள்
காரி (சனி) 1 ஆண்டு 1 திங்கள் 9 நாள்
அறிவன் (புதன்) 11 திங்கள் 27 நாள்
கேது 4 திங்கள் 27 நாள்
வெள்ளி (சுக்கிரன்) 1 ஆண்டு 2 திங்கள்
ஞாயிறு 4 திங்கள்
நிலவு 7 திங்கள்
ஆக மொத்தம் 7 ஆண்டுகள் செவ்வாய் தசை இராசிக்காரருக்கு நடைபெறும்.
1. செவ்வாய் புக்தி: கொஞ்சம் எச்சரிக்கையுடன் வாழ வேண்டிய நாட்கள் இவை. அரசால் பாதிப்பு ஏற்படலாம். நாய், தேள், பூனை இவற்றை கன்டால் ஒதுங்கி விடுவது நல்லது. உங்களை பாதிக்கும் பில்லி சூனியம் இவை உங்களை விட்டு அகலும்.
2. இராகு புக்தி: கொடிய நச்சால் பாதிப்பு உண்டாகலாம். புதிய வீட்டிற்கு குடி பெயர்வீர்கள். செல்வம் சற்று குறையும். வருவாய் வாழ்வதற்கு போதுமானதாக இருக்கும்.
3. வியாழன் புக்தி: செவ்வாய் தசையில் வரும் வியாழன் புக்தி பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நாட்களில் துன்பம் வந்து சேருவதை யாராலும் தடுக்க இயலாது.
4. காரி புக்தி: சண்டை, வழக்குகள், உடல் சோர்வு, வாங்கிய பொருள் வீன், பதவியில் இருந்தால் அதில் சற்று சருக்கல் என சில சிக்கல்கள் வந்து போகும்.
5. அறிவன் புக்தி: பெண்களுடன் பழக்கம் ஏற்படும். கைவிட்டு போன செல்வங்கள் எல்லாம் வந்து சேரும். வருவாய் பெருகும். நோய் நொடிகள் முற்றிலும் நீங்கும். புரட்டாசி திங்களில் மட்டும் சற்று பாதிப்பாக இருக்கும்.
6. கேது புக்தி: பெண்களால் பகை வரும். நோய் உண்டாகும். உறவினர்கள் பகை வரும்.
7. வெள்ளி புக்தி: பொருள் சேர்க்கை இருக்கும். பெண்களிடம் பழக்கம் ஏற்படும். செல்வந்தர், ஊர் பெரியவர்களுடன் பழக்கம் கைகூடம். வண்டி வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கடவுள் நம்பிக்கை கூடும்.
8. ஞாயிறு புக்தி: நெருப்பால் பாதிப்பு உண்டாகும். வாழ்க்கை துணைக்கு உடல் பாதிப்பு உண்டாகும். எதிர்பாரதவர் பகைவர் ஆவார்.
9. நிலவு புக்தி: நிலம் வாங்குவீர்கள். ஆடு, மாடு, கோழி இவைகளின் எண்ணிக்கை பெருகும். பொன், முத்து, பவளம், ஆடை, உன்பம், மகிழ்ச்சி, இவை பெருகும். இட மாறுதல் வருவாயை பெருக்கும்.