ADVERTISEMENT

ஜோதிடம் உண்மையா? ஆருடம் பலிக்குமா?

ஜோதிடம் உண்மையா? ஆருடம் பலிக்குமா? ஜோதிடம் உண்மையா? ஆருடம் பலிக்குமா?

ஜோதிடம் உண்மையா? ஆருடம் பலிக்குமா? ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வான்வழிகளில் ஏற்படும் விண்மீன் இருப்பிடங்களை கணக்கில் எடுத்து, அதன் மூலம் என்ன நடக்கிறது, வரும் நாட்களில் என்ன நடக்கும் என ஆருடம் கூறும் பழக்கம், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் மனிதர்களிடையே இருந்து வந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, இயேசுவின் பிறப்பு குறித்து,  ஞானிகள் என கருதப்படுபவர்கள், வானில் தோன்றிய வால் விண்மீனை வைத்து, யூதர்களுக்கான மீட்பர் ஒருவர் பிறந்துள்ளார் என கணித்துள்ளனர்.  அதை மக்களும் முழுமையாக இன்றளவும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இன்றைய அறிவியலாளர்கள், பலவிதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வான்வழி ஆய்வுகள் பல கண்டறிவதற்கு முன்னரே, நமது முன்னோர்கள் வெறும் கண்களாலேயே பல கோள்களையும், அவை சுற்றி வரும் பாதையையும் துல்லியமாக கண்டறிந்து, அது தொடர்பில் பல ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தாங்கள் கண்டறிந்த கோள்களின் இயக்கத்தினை நன்கு அறிந்திருந்த நமது முன்னோர்கள், அவற்றின் இருப்பிடத்தை பொறுத்து இந்த புவியில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது குறித்தும் கணித்து, அதை இலக்கணமாக நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் விட்டுச் சென்ற அந்த இலக்கணங்களையே நாம் ஜோதிடம் என கூறுகிறோம்.

ஜோதிடம் என்பது இலக்கண விதி.  ஒவ்வொரு மனிதன் பிறக்கும் நேரத்தை பொறுத்து இந்த விதி அமைவதாக ஜோதிடம் கணிக்கிறது.  இந்த விதி, இந்த மண்ணில் பிறந்த ஒரு மனிதன் தனது வாழ்நாளில் அனுபவிக்கக்கூடிய யோக மற்றும் யோகமற்ற நிலை பற்றி, அதாவது அந்த ஜாதகர் அனுபவிக்கக் கூடிய நல்ல மற்றும் தீய பலன்களாகிய, ஜாதகரின் வாழ்க்கை முறைகளைப் பற்றித் தெரிவிப்பதுவே!.

இந்த ஜோதிட விதிகளை எவராலும் மாற்ற இயலாது. பரிகாரம், நிவர்த்தி போன்ற எவையும் இந்த ஜோதிட இலக்கண விதிகளில் இல்லை.  நாளடைவில், மனிதனின் மனதை திருப்தி படுத்த, சில குறுக்கு வழி பித்தர்கள், ஏற்படுத்திக் கொண்டவை தான் பரிகார பூஜை புனஸ்காரங்கள்.  ஜாதகர்கள் இது குறித்து தெளிவான மனநிலை கொண்டு, இத்தகைய பித்தர்களிடம் ஏமாறாமல் இருப்பதே சிறந்தது.

நான் மனிதன், உயிரற்ற ஞாயிறும் நிலவும் என் வாழ்நாளை மாற்ற இயலுமா?

முதலில் மனிதன் என்பது யார்?  மனிதனின் உடல், இந்த புவியில் உள்ள நீரை 70% கொண்டதாகவும், 29% Oxygen, hydrogen, nitrogen, carbon, calcium, and phosphorus ஆகியவை உள்ளடக்கியதாகவும், கடைசி 0.85% sulfur, potassium, sodium, chlorine, and magnesium கொண்டதாகவும் இருக்கிறது.  மீதமுள்ள 0.15%, இந்த புவியில் கிடைக்கும் பிற தாது பொருட்களை கொண்டது.  ஆகவே மனிதன், முழுக்க முழுக்க இந்த புவியின் மண்ணோடு மண்ணானவன்.  

Jain மத கூற்றின்படி, மனிதன் தவிர்த்து இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கான உயிரும், இந்த மண் சார்ந்தவை.  அதாவது, விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் அனைத்தின் உடலும் இந்த மண்ணால் ஆனது என்பது மட்டுமல்லாது, அதை இயக்கும் திறனான அதன் உயிர்களும் இந்த புவி சார்ந்தது.

மனிதனின் உடல் இந்த மண்ணால் ஆனது என்றாலும், உயிர் தன்னாட்சி கொண்டது.  அந்த உயிரால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள இயலும்.  வான்வழிகளில் சுற்றித் திரியும் இந்த உயிர், புவி காட்டும் ஆசைகளால் மனித உடலில் தோன்றுகின்றன.

அதாவது, மனிதன் ஒரு மண் கலவை, அந்தக் கலவை இங்கும் அங்கும் பயணிப்பதற்கு இந்த புவியில் கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்திக் கொள்கிறது.  இந்த மண் கலவைக்கு, தன்னைத்தானே மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் எதுவும் கிடையாது.  இந்த நிலை எந்த அளவிற்கு ஒப்பானது என்றால், மின்மோட்டார் போன்றது.  மின்மோட்டார் இந்த மண்ணில் கிடைத்த தாது பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டது.  மின்சாரம் இருந்தால் அது இயங்கும்.  அதே போன்றது தான் மனிதனும்.  உயிர் என்கிற திறன் உப்புகுந்தால் அது இயங்குகிறது.

பல லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோள்களால் என் வாழ்நிலையை கட்டுப்படுத்த முடியுமா?


அறிவியல் ரீதியாக ஒன்றைச் சொன்னால் வியப்பாக இருக்கும். இயற்பியலின்படி, இந்த உலகம், மூன்று பொருட்களால் ஆனது.  அவை Electron, Proton மற்றும் Neutron. தங்கமாக இருந்தாலும், களிமண்ணாக இருந்தாலும், அவை அனைத்தும் இந்த மூன்று பொருட்களால் ஆனவையே.  எல்லாம் ஒன்றே, ஆனால் வேறாக தோற்றமளிக்கின்றன!

இதில் இந்த எலக்ட்ரான், எலக்ட்ரான் மற்றும் போட்டான் எனும் வடிவத்தில் அண்டங்கள் முழுவதும் பரவி கிடக்கின்றன.  எல்லா பொருட்களும் அண்டம் முழுவதும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன.   பிணைக்கப்பட்டுள்ளதால்தான், வியாழன் தாண்டி தொலைவில் உள்ள கோள்களையும் புகைப்படமாகவும் காணொளியாகவும் நம்மால் காண இயல்கிறது.  அவை ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன.

எளிதாக சொல்வதானால், இந்த அண்டம் முழுவதும் ஒரே பொருளால் செய்யப்பட்டு, அந்த பொருட்கள் அனைத்தும், அதே பொருளில் மிதக்க விடப்பட்டுள்ளது. அவை ஒன்றுக்கொன்று கட்டுப்பட்டவை.  அவை எல்லாம் கூட்டாக இயங்குகின்றன.  அவை தனித்தனியாக தன் விருப்பத்திற்கு இயங்கத் துவங்கினால் இந்த அண்டம் சிதைந்து விடும்.

கோள்களின் நிலையும் மனிதன் மீதான தாக்கமும்!

நிலவின் நிலை பொறுத்து கடல் நீரின் மட்டம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.  கடற்கரை ஓரம் வாழ்ந்து பார்த்தால் இது நமக்கு நன்றாக புலப்படும்.

நிலவின் நிலை பூமியின் கடல் மட்டத்தை மாற்றி அமைக்கிறது.  கடல் மட்டம் மட்டுமல்ல, அதன் நீரின்  ஓட்டங்களையும் மாற்றியமைக்கிறது.  அப்படியானால் நிலவின் திறன் இந்த பூமியின் மீது மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மனிதனும் இந்த புவியும் வேறு வேறு அல்ல.  எல்லாம் ஒன்றே.  அப்படி இருக்க, மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தையும் இந்தக் கோள்கள் தங்கள் இருப்பிடத்தை பொறுத்து மாற்றி அமைக்கின்றன.

இதை இலக்கணமாக எடுத்துச் சொல்வதே ஜோதிடம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading