சுனபா யோகம், அனபா யோகம்
வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம்.
வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 12 ஆம் இடத்தில் இருந்தால் இது அனபா யோகம்.
இந்த அனபா யோகம் சற்று சிக்கலானது.
அதாவது எல்லா வரங்களும் இருக்கும். எல்லா செல்வங்களும் இருக்கும். இன்பத்திற்கும், மகிழ்விற்கும் குறை இருக்காது. ஆனால், மனது இன்னும் கூடுதாக தேடிக்கொண்டே இருப்பதால், வாழ்வில் மகிழ்வை மகிழ்வாக அனுபவிக்க மாட்டார்கள். இன்பத்தை முழுதாக பெற்றதாக மனம் ஏற்காததால், எதையோ இழந்தது போன்ற நிலை வாழ்வு முழுதும் நீடிக்கும்.
சுனபா யோகம், அனபா யோகம் பெற்றவர்கள் தமது முயற்சியால் வாழ்வில் கண்டிப்பாக வெற்றி நிலையை அடைவார்கள்.
சுனபா யோகம் அல்லது அனபா யோகம் பெற்றவர்கள் கடல் கடந்து பயணித்து வாழ்வில் உயர் நிலைக்கு வருவார்கள்.
அவர்களின் பிள்ளைகள் மென் மேலும் வாழ்வில் உயர்ந்து வரும்.
வியாழன் சாதகத்தில் இருக்கும் இடத்தை பொருத்து வாழ்வு சிறந்து அமையும்.
அப்படி வியாழனும் நிலவும் சரியான வீடுகளில் சாதத்தின் படி இல்லா விட்டாலும், அதற்காக கவலை பட வேண்டாம்.
வியாழனும் நிலவும், தனது இடப் பெயற்சிகளால் இத்தகைய இராசிக்காரர்களுக்கும் நல்லதை செய்வார்.