ADVERTISEMENT

ரிஷபம் லக்னமும், அவர்களுக்கான தொழில் அமைப்பும்

ரிஷபம் லக்னமும், அவர்களுக்கான தொழில் அமைப்பும் ரிஷபம் லக்னமும், அவர்களுக்கான தொழில் அமைப்பும்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருப்பதுபோன்று ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் காரி (சனி) வருவாய் மற்றும் தொழில் ஆகியவற்றுக்கான உரிமையாளர் ஆவார்.

காரி 9 மற்றும் 10 ஆகிய வீடுகளுக்கு உரிமையாளராகவும் பொறுப்பாளராகவும் இருப்பதாலும், அவர் வெள்ளியின் நட்புக்கு உரியவர் என்பதாலும், ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த நல்லூழ் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு காரி, திரிகோணத்தில் ஏதாவது ஒன்றில் இருந்தால், அவர்கள் உயர் பதவியில், உயர்ந்த நிலையில் தம் தொழிலை அமைத்துக் கொள்வர். இத்தகைய அமைப்பு பெற்றவர்கள், நிலையான வருவாய் கொண்டு தம் வாழ்வில் மகிழ்வாக செல்வம் சேர்ப்பர்.

காரி பலம்பெற்று, வெள்ளி அல்லது அறிவன் போன்ற நட்பு கோள்களுடன் சேர்க்கை கொண்டிருந்தால், அத்தகைய ஜாதகக்காரர்கள், சொந்த தொழில் செய்து அதில் நிலையான வருவாய் மற்றும் தமக்குக் கீழ் நிறைய பணியாளர்களையும் அமர்த்தி வெற்றிகரமான வருவாய் ஈட்டும் தொழில் புரிவர்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, வெள்ளி அல்லது அறிவன் ஆகியவற்றின் தசை நடந்தால், அந்த நேரத்தில் இவர்களின் தொழிலில் மென்மேலும் சிறந்து ஓங்கி உயர்வான நிலைக்கு கொண்டு போய் சேர்க்கும்.

10-தாம் வீட்டின் உரிமையாளர் காரி என்பதால், இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், இரும்பு தொடர்பான தொழில் மேற்கொண்டால் அல்லது அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டால், நிரந்தரமான வருவாய் கொண்டு இருப்பார்.

இவர்கள், பெண்களுக்கான அழகு பொருட்கள், வண்டி வாங்கி விற்பது, டிராவல்ஸ் தொழில் மேற்கொள்வது ஆகியவை வெற்றி தரும்.

காரி, வெள்ளி அல்லது நிலவுடன் சேர்க்கை பெற்று, அதில் ஏதாவது ஒரு கோள் உச்சமோ ஆட்சியோ பெற்று விளங்கினால், அத்தகைய அமைப்பு பெற்றவர்கள் திரைத்துறையில் வெற்றி வாகை சூடுவர்.

அறிவன் சேர்க்கை இருந்தால், அந்த லக்னகாரர்கள், தாமாக தொழில் துவங்கி அதில் வெற்றி பெறுவர்.

காரி, செவ்வாயுடன் இணைந்து இருந்தால், அவர்கள் கூட்டுத் தொழிலில் வெற்றி பெறுவர்.  செவ்வாயுடன் வெள்ளியும் சேர்ந்து இருந்தால், அவர்கள் நிலம் வீடு ஆகியவற்றை வாங்கி விற்கும் தொழிலில் பெரும் செல்வம் சேர்ப்பர்.

ரிஷப லக்கினக்காரர்களுக்கு, ராகு 9 அல்லது 12 இருந்தால் அல்லது செவ்வாய் நிலவுடன் சேர்ந்து இருந்தால் அத்தகைய அமைப்பு கொண்டவர்கள் கடல் கடந்து வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

ராகுவுடன் காரி சேர்ந்து இருந்தால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதமாக திடீர் பணக்காரர் ஆவார்கள்.

காரி கோளுக்கு, செவ்வாய் மற்றும் ஞாயிறு பகை என்பதால் ரிஷப லக்னக்காரர்கள், அரசுத்துறை வேலைகளை தவிர்ப்பது நல்லது. ஆனால், கும்பராசியில் (10-வது வீடு), செவ்வாயின் விண்மீனான அவிட்டத்தில் அல்லது வியாழனின் விண்மீனான பூராட்டத்தில் அமைந்திருந்தால், அத்தகைய அமைப்பு கொண்டோர், அரசு துறைகளில் உயர் பதவியில் வீற்றிருப்பார்.

இவர்கள் மருத்துவத்துறையில் சிறந்து விளங்க வேண்டுமாயின், நிலவு அல்லது ஆகியவற்றுடன் ஞாயிறு அல்லது ராகுவுடன், செவ்வாய் பலம் பெற்றிருத்தல் வேண்டும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading