வெள்ளி தசையில், முதலில் துவங்குவது வெள்ளி புக்தி. அதை தொடர்ந்து ஞாயிறு, நிலவு என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.
பரணி, பூரம், பூராடம் ஆகிய விண்மீன்கள் வெள்ளி தசையை முதலாவதாக கொண்டிருக்கும். வெள்ளி தசையின் மொத்த நேர அளவு 20 ஆண்டுகள்.
வெள்ளி தசையில் புக்திகளில் நேர அளவு:
வெள்ளி 3 ஆண்டு 4 திங்கள்
ஞாயிறு 1 ஆண்டு
நிலவு 1 ஆண்டு 8 திங்கள்
செவ்வாய் 1 ஆண்டு 2 திங்கள்
இராகு 3 ஆண்டு
வியாழன் 2 ஆண்டு 8 திங்கள்
காரி 3 ஆண்டு 2 திங்கள்
அறிவன் 2 ஆண்டு 10 திங்கள்
கேது 1 ஆண்டு 2 திங்கள்
1. வெள்ளி புக்தி: செல்வம், தங்கம், வெள்ளி, வைடூரியம் என யானை முதற்கொன்ரு வாங்கி மகிழும் நேரமிது. துன்பம் என்பது எட்டா தொலவிற்கு ஓடிவிடும். இன்பம் பெருகும். பொருள் சேர்க்கை, வீடு, நிலம், புலம் என தாமாக வரும்.
2. ஞாயிறு புக்தி: துன்பம், செல்வம் அழிவு, அரசிடம் பகை, தீய எண்ணம், பிள்ளைகளை பிரிதல் என துன்பம் வரும்.
3. வெள்ளி புக்தி: நினைப்பதெல்லாம் நடந்தேறும். எல்லாம் கைகூடும். மகிழ்வான வாழ்வதற்கான நேரமிது.
4. செவ்வாய் புக்தி: நிலம் வாங்குவீர்கள். வீடு கட்டுவீர்கள். மருந்துன்னும் நிலை வரும்.
5. இராகு புக்தி: கடவுள் நம்பிக்கை பெருகும். வருவாய் கிடைக்கும். பகை நன்மை தரும். பகை தவிர்த்தல் மேலும் நன்மை தரும். மன அழுத்தம் ஏற்படும்.
6. வியாழன் புக்தி: செல்வம் சேரும். வாழ்வதன் பொருள் புரியும். அறிவும் ஆற்றலும் திறம்பட செயல்படும்.
7. காரி புக்தி: உணவில் கட்டுப்பாடு தேவை. வெப்பப் பகுதிகளில் வாழாமல் குளிர்ந்த வானிலை கொண்ட பகுதிகளுக்கு இடம் பெயர்தல் நலம். கை கால்களில் பாதிப்பு உண்டாகும்.
8. அறிவன் புக்தி: வாழ்க்கை துணையால் சிறப்பு ஏற்படும். பிள்ளைகளால் புகழும், செல்வமும், சிறப்பும் கிடைக்கும்.
9. கேது புக்தி: பிற பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலும் ஒழுக்கம் மட்டுமே வாழ்வை சிறக்க செய்யும் என்னும் மன திடம் தேவை. இல்லையேல் நோய் நோக்காட்டால் துன்பம் வரும்.