ADVERTISEMENT

ஜோதிட கோள்களில் நண்பர்கள் மற்றும் பகைவர்கள்

ஜோதிட கோள்களில் நண்பர்கள் மற்றும் பகைவர்கள் ஜோதிட கோள்களில் நண்பர்கள் மற்றும் பகைவர்கள்

மனிதர்களுக்கு நண்பர்கள் மற்றும் பகைவர்கள் இருப்பது போன்றே ஆருடத்தில் கொடுக்கப்பட்டுள்ள கோள்களுக்கும் நண்பர்கள் மற்றும் பகைவர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஜோதிட கணிப்பு. 

மனிதர்களை பொருத்தவரை இன்றைய நண்பர்கள் நாளைய பகைவர்கள்.  இன்றைய பகைவர்கள் நாளைய நெருங்கிய நண்பர்கள்.  மனிதர்களிடையே நட்பும் பகையும் நிலையானது அல்ல.  ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை கோள்கள் ஒன்றுக்கொன்று நண்பர்கள் அல்லது பகைவர்கள் என்பது நிலையானது. இதற்கு விதிவிலக்கு என்னவென்றால், பிறந்த லக்னத்தைப் பொறுத்தும் பிறந்த நேரத்தில் கோள்களின் அமைப்பு நின்றதன் பொருட்டு, நட்பு மற்றும் பகை கோள்களின் அமைப்பு ஏற்படும். 

எடுத்துக்காட்டாக, வியாழனும் ஞாயிறும் ஒன்றுக்கொன்று நட்பானவர்கள் என்றபோதிலும், பிறந்த ஜாதகத்தில் வியாழனுக்கு விரைய இடத்தில் ஞாயிறு நின்றால் அந்த ஞாயிறு வியாழனின் பலன்களை தடுத்து நிறுத்தி பகை தன்மையுடன் அமையப்பெறும். 

அதே அடிப்படையில், நிலவிற்கு ஞாயிறு அல்லது ஞாயிறுக்கு நிலவு ஏற்றுக்கொள்ளக்கூடிய நடுநிலை அல்லது நட்பு கோள்களாக இருப்பினும், நிலவிற்கு 3ம் இடத்தில் ஞாயிறு இருந்துவிட்டால், நிலவின் நற்பயன்கள் யாவற்றையும் ஞாயிறு தடுக்கும் நிலையில் பகை கொண்டு இருக்கும். 

பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் அவை நிலைகொண்டிருக்கும் இடத்தை பொருத்து நட்பு மற்றும் பகை தன்மைகளை கொண்டிருந்தாலும், ஆருட கணிப்பில் எந்தெந்த கோள்கள் எவற்றிற்கு பகை, எவற்றிற்கு நட்பு என கீழே உள்ள பட்டியலில் பார்க்கலாம்:

நட்பு கோள்கள் பட்டியல்: 


1. ஞாயிறு:  திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன். 

2. திங்கள்:  அறிவன். 

3. செவ்வாய்:  திங்கள் மற்றும் வியாழன். 

4. அறிவன்:  வெள்ளி மற்றும் காரி. 

5. வியாழன்: ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய். 

6. வெள்ளி: அறிவன், காரி, ராகு-கேது. 

7. காரி (சனி): அறிவன், வெள்ளி, ராகு, கேது. 

8. ராகு: வியாழன், வெள்ளி மற்றும் காரி. 

9. கேது: செவ்வாய், வெள்ளி மற்றும் காரி. 

அடுத்ததாக பகை கோள்கள் பட்டியல்: 


1. ஞாயிறு:  வெள்ளி, சனி, ராகு, கேது ஆகியவை பகை. 

2. திங்கள்:  ராகு, கேது. 

3. செவ்வாய்:  அறிவன் (புத), ராகு, கேது. 

4. அறிவன்:  வியாழன். 

5. வியாழன்: அறிவன் மற்றும் வெள்ளி. 

6. வெள்ளி: ஞாயிறு மற்றும் திங்கள். 

7. காரி (சனி): ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகியவை பகை. 

8. ராகு: ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய். 

9. கேது: ஞாயிறு மற்றும் திங்கள். 

அடுத்ததாக நடுநிலை கோள்கள் பட்டியல்: 


1. ஞாயிறு:  அறிவன். 

2. திங்கள்:  வியாழன், ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, காரி. 

3. செவ்வாய்:  ஞாயிறு, வெள்ளி மற்றும் காரி. 

4. அறிவன்:  ஞாயிறு, திங்கள், செவ்வாய், ராகு, கேது. 

5. வியாழன்: காரி, ராகு, கேது. 

6. வெள்ளி: செவ்வாய் மற்றும் வியாழன். 

7. காரி (சனி): வியாழன். 

8. ராகு: அறிவன் மற்றும் கேது. 

9. கேது: அறிவன், வியாழன் மற்றும் ராகு. 


மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பட்டியல்களிலும் கவனித்தால், திங்களை பொறுத்தவரை ராகு மற்றும் கேது ஆகியவை மட்டுமே பகை என்றும் அறிவனை பொருத்தவரை வியாழன் மட்டுமே பகை என்றும் அறிந்து கொள்ளலாம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading