ADVERTISEMENT

கோள்களின் உயர்வான (உச்ச) நிலை வீடுகள்

கோள்களின் உயர்வான (உச்ச) நிலை வீடுகள் கோள்களின் உயர்வான (உச்ச) நிலை வீடுகள்

ஆரூடத்தில் கொடுக்கப்பட்டுள்ள 9 கோள்களில் நிலையான 7 கோள்கள் தத்தமக்கு என, ராசி வீடுகளை தமது ஆட்சி வீடுகளாக கொண்டுள்ளன என்பதை அறிவோம்.  ராகு மற்றும் கேது ஆகிய நிழல் கோள்களுக்கு ஆட்சி வீடுகள் என்று எதுவும் இல்லை என்றும் அறிவோம். 

உயர்வான நிலை வீடுகளை பொருத்தவரை, 9 கோள்களுக்கும், ஒரு ராசி வீடு உயர்வான வீடாகும்.  இதை ஏன் நாம் உயர்வான வீடு என்று குறிப்பிடுகிறோம் என்றால், குறிப்பிட்ட ராசி வீட்டில் அந்த கோள் இருக்கும் பொழுது, அது தனது ஆட்சி வீட்டைக் காட்டிலும் 125% கூடுதலாக வலுப்பெற்ற நிலையில் இருக்கும். 

ஆட்சி வீடுகளைப் பொறுத்தவரை இரண்டு கோள்களுக்கு தமக்கென ஆட்சி வீடு கிடையாது.  இங்கே உயர்வான நிலை கொண்ட வீடை பொருத்தவரை, மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகள் எந்த கோள்களுக்கும் உயர்வான நிலையை கொடுப்பது இல்லை.  ஆகவே எந்தக் கோளும் இந்த ராசிகளில் உயர்வான நிலையை பெறாது. 

உயர்வான நிலை என்கிற நிலையை பொறுத்தவரை, அந்த நிலை ஒரே ஒரு ராசி வீட்டில் மட்டுமே ஒரு கோளுக்கு கிடைக்கும்.  

விருச்சிக ராசி, நச்சுத்தன்மை கொண்ட ராசி என்று அழைக்கப்படுகிறது.  ஏனெனில் விருச்சிக ராசி வீட்டில்தான், பாம்பின் அடையாளமாக குறிப்பிடப்படுகின்ற கோள்கள் ராகு மற்றும் கேது ஆகியவை தமது உயர்வான நிலையை எட்டுகின்றன. 

எந்தெந்த கோள்கள் எந்தெந்த ராசி வீடுகளில் தமது உயர்வான நிலையை அடைகின்றன என்பது குறித்து பார்க்கலாம்: 


ஞாயிறு, மேஷம் ராசி வீட்டில் உயர்வான நிலை பெறுகிறது. 


திங்கள், ரிஷபம் ராசி வீட்டில் உயர்வான நிலை பெறுகிறது. 


செவ்வாய், மகரம் ராசி வீட்டில் உயர்வான நிலை பெறுகிறது. 


அறிவன் (புத), கன்னி ராசி வீட்டில் உயர்வான நிலை பெறுகிறது. 


வியாழன், கடகம் ராசி வீட்டில் உயர்வான நிலை பெறுகிறது. 


வெள்ளி, மீனம் ராசி வீட்டில் உயர்வான நிலை பெறுகிறது. 


காரி (சனி), துலாம் ராசி வீட்டில் உயர்வான நிலை பெறுகிறது. 


ராகு - கேது, விருச்சிகம் ராசி வீட்டில் உயர்வான நிலை பெறுகிறது.



Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading