ADVERTISEMENT

9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா?

9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா? 9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா?

சோதிடத்தில் பல கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.  அவற்றுள் சிறந்தவை 9 கற்கள்.

அந்த 9 கற்களுக்கும் ஒரு குணம் உள்ளது என்றும், அவற்றை அணிய எல்லா இராசிக்காரர்களுக்கும் ராசி இருக்காது என்றும் கூறுவர்.

அதாவது, பவளம் ஒரு இராசிக்கு நன்மை என்றால் மற்றொரு இராசிக்கு தீமை என்று கணிக்கின்றனர்.

ஆனால், ஒன்பது கற்களையும் ஒன்றாக சிலர் அணிவதையும் பார்க்கிறோம்.  அப்படியானால், எல்லோரும் ஒன்பது வகை கற்கள் பதித்த மோதிரம் அணியலாம? என்ற கேள்வி எழுகிறது.

ஒன்பது ரத்தின கற்கள் பதித்த ஒன்பது கோள்களை அடையாளப்படுத்தும் மோதிரம் ஒருவருக்குப் பொருந்திவிட்டால் அவர் மிகச் சிறந்த நல்லூழ் கொண்டவர் என்று தான் சொல்ல முடியும்.

அதாவது ஒன்பது சிறப்புகளும் அவருக்கு பொருந்தும் என்று தான் பொருள். அதாவது சாதனை படைப்பதில், வெற்றி பெறுவதில், குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, மரியாதை, உயர் பதவி என அனைத்தும் அவருக்கே உரியதாக இருக்கும்.

உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றியும் கிடைக்கும்.

ஆனால், ஒன்றை கவணமாக கவனிக்க வேண்டும்.  ஒன்பது கற்கள் பொருந்திய ஒன்பது கோள்களை குறிக்கும் மோதிரம் அனைவருக்கும் ஏற்றுபுடையதாய் இருக்காது.

அப்படியானால், இந்த ஒன்பது கல் பதித்த மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..?

மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் வின்மீனில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த ஒன்பது கல் மோதிரத்தை அணியலாம்.

சாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம்.

திருமணமானவர்கள் இரவில் அணியக் கூடாது.

பெண்கள் நவரத்தின மோதிரத்தை அணிவதால் கோள்களில் உள்ள அணைத்து தீயவையும் வந்து சேரும்.  ஆக, பெண்களுக்கு இந்த ஒன்பது கல் மோதிரம் ஆகாது.

சாதகத்தை நன்கு ஆய்வு செய்து அதற்குத் தகுந்தாற்போல் கற்களின் வடிவமைப்பும் உலோகத்தையும் இணைத்து அணிந்தால் மட்டுமே எண்ணிய பலன்கள் அளிக்கும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading