பிறந்த நேரம், நல்லதைத் தான் ஜாதகருக்கு செய்ய வேண்டும், என எல்லோரும் விரும்புவதுண்டு.
பிறந்த நேரம் நல்ல நேரம் என்பது, ராசிக்கட்டத்தில், அமையப்பெறும் கோள்களின் நிலை.
ஆகவே, ஒரு ஜாதகத்தில், பிறந்த நேரத்தில் நற்பயன்கள் என்னென்ன உள்ளது என்கிற ஜாதகத்தை கணிக்க வேண்டுமேயானால், எந்தெந்த கோள்கள் எந்தெந்த வீட்டில் உள்ளார்கள் என்பதை முழுமையாக ஆராய வேண்டும்.
அடுத்ததாக, எந்த கோள் எந்த கோள் உடன் சேர்ந்து இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். அதுமட்டுமல்லாது அந்த கோள்களின் பார்வை குறித்தும் ஆராய வேண்டும்.
இந்த தகவல்களை குறித்துக்கொண்ட பின், கோள்கள் உச்சம், நீச்சம் அல்லது அவை நிலை குறித்து ஆராய வேண்டும். அடுத்ததாக விண்மீன் விண்மீன்களின் நிலை, கோள்களின் சேர்க்கை என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
யோகம் என்றால் என்ன என்பதை எளிதாக சொல்ல வேண்டுமேயானால், ஒரு கோளுக்கும் இருக்கும் மற்ற கோளுக்கும் உள்ள தொடர்பு, அதாவது சேர்க்கை அல்லது பார்வை, அதனால் ஏற்படும் நன்மை தீமை.
யோகம் என்றால் நல்லது மட்டுமே நடக்கும் என்பது அல்ல. தீய பலன்களைத் தரும் கோள்களின் பழிப்பு நிலைகளும், யோகம் என்றே தலைப்பிடப்படுகிறது.
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்" என்ற குறளுக்கு ஏற்ப, மெய் வருந்தி உழைப்பதால் ஏற்படும் பயன்களை, கோள்களின் ராசி கட்டங்களில் உள்ள நிலைகளால் மட்டுமல்லாது, தெய்வங்களாலும்
தடுக்க இயலாது.
குறிப்பாக, குறுக்கு வழிகளை தேடப்படும் பரிகார வழிமுறைகள், எவ்வகையிலும் நல்ல பயன்களை தரப்போவது இல்லை.