ADVERTISEMENT

ராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்

ராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்

ராசி அதிபதி பொருத்தம் - இராசி உரிமையாளர் பொருத்தம்

27 விண்மீன்களும் 12 ராசிக்களில் அடங்குகின்றன.

இந்த 12 ராசிக்களுக்கும் தனி தனியாக உரிமையாளர் இருக்கிறார். உரிமையாளர் என்ற தமிழ் சொல் வட மொழியில் அதிபதி என்கிறார்கள்.

ராசிக்கான உரிமையாளர் என கோள்களை வைத்துள்ளனர்.

இந்த ராசி உரிமையாளர்களுள் சிலர் நட்பாகவும், சிலர் ஒருவருக்கு ஒருவர் அமைதி நிலையிலும், சிலர் பகையாகவும் இருக்கிறார்கள் என சோதிடம் கணிக்கிறது.

எடுத்துக்காட்டாக ஞாயிறுக்கு நிலவு நட்பு. அறிவன் (புதன்) சமம் என்று சொல்கிறார்கள். காரி (சனி) பகை கோளாக அமைந்துள்ளது.

எதற்காக இந்த ராசி அதிபதி பொருத்தம் பார்க்கிறோம்?

ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் பெண்ணும் ஆணும் கூடி வாழும் பொழுது அவர்கள் நெருங்கிய அன்புடன் வாழ்வார்கள்.

மேலும், ராசி பொருத்தம் இருந்தால், பெண்ணை பெற்றவர்களும், அவளின் குடும்பத்தாரும், ஆணை பெற்றவர்களும், அவனின் குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அன்பு பாராட்டி வாழ்வார்கள்.

மேலும் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருப்பினும் ஆணும் பெண்ணும் பொருத்தம் இருந்தால் ஒத்து இருப்பர், இல்லையேல் மாற்று கருத்துக்களால் பகை கொண்டு மன அமைதி இன்றி இருப்பர்.


கோள்களும் அவற்றின் ஒற்றுமை நிலையும்


கோள்கள்கோள்களின் நட்பு நிலை
நட்புசமம்பகை
ஞாயிறுசெவ்வாய், நிலவு, வியாழன்அறிவன் (புதன்)வெள்ளி (சுக்), காரி (சனி)
நிலவுஞாயிறு, அறிவன் (புதன்)செவ்வாய், வியாழன், வெள்ளி (சுக்), காரி (சனி)-
செவ்வாய்நிலவு, ஞாயிறு, வியாழன்வெள்ளி (சுக்), காரி (சனி)அறிவன் (புதன்)
வியாழன்செவ்வாய், ஞாயிறு, நிலவுகாரி (சனி)வெள்ளி (சுக்), அறிவன் (புதன்)
வெள்ளி (சுக்)அறிவன் (புதன்), காரி (சனி)செவ்வாய், வியாழன்ஞாயிறு, நிலவு
அறிவன் (புதன்)ஞாயிறு, வெள்ளி (சுக்)செவ்வாய், வியாழன், காரி (சனி)நிலவு
காரி (சனி)வெள்ளி (சுக்), அறிவன் (புதன்)வியாழன்செவ்வாய், ஞாயிறு, நிலவு


 


யார் எந்த ராசிக்கு அதிபதி?


இராசிஉரிமையாளர் - அதிபதிதன்மை
மேஷம், விருச்சிகம்செவ்வாய்நிலம், ஆற்றல், திறமை
ரிஷபம் , துலாம்வெள்ளி (சுக்)வாழ்வு மகிழ்சி
மிதுனம், கன்னிஅறிவன் (புதன்)கல்வி, அறிவாற்றல்
கடகம்நிலவுமனம், அன்பு, அம்மா
சிம்மம்ஞாயிறுஉடல், வழி நடத்துதல், தந்தை
தனுசு , மீனம்வியாழன் (குரு)செல்வம், குழந்தை
மகரம் , கும்பம்காரி (சனி)ஆயுள், தொழில்
ராகு, கேதுஇவற்றிற்கு என்று உரிமையாக எந்த ராசியும் இல்லை.தனி தன்மை இல்லை


 


பொருந்தாத இராசிகள்


மேலே சொன்ன கணக்கின் படி பார்த்தால்

மேஷம் ராசி ரிசபம், மிதுனம், மகரம், மீனம் இவற்றிற்கு பகை

ரிசபம் ராசி கடகம், சிம்மம், விருட்சிகம், தனுசு, மீனம் இவற்றிற்கு பகை

மிதுனம் ராசி கடகம், சிம்மம், தனுசு இவற்றிற்கு பகை

கடகம் ராசி மேசம், விருட்சிகம், மகரம், கும்பம் இவற்றிற்கு பகை

சிம்மம் ராசி ரிசபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் இவற்றிற்கு பகை

கன்னி ராசி மிதுனம், கடகம், சிம்மம், விருட்சிகம், தனுசு, மீனம் இவற்றிற்கு பகை

துலாம் ராசி ரிசபம், கடகம், சிம்மம், கன்னி, விருட்சிகம், தனுசு, மீனம் இவற்றிற்கு பகை

விருட்சிகம் ராசி மேசம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், கும்பம் இவற்றிற்கு பகை

தனுசு ராசி, ரிசபம், மிதுனம், துலாம், மகரம், கும்பம் இவற்றிற்கு பகை

மகரம் ராசி, மிதுனம், கடகம், சிம்மம், கும்பம் இவற்றிற்கு பகை

கும்பம் ராசி கடகம், சிம்மம், கன்னி, மகரம் இவற்றிற்கு பகை

மீனம் ராசி ரிசபம், கன்னி, துலாம், விருட்சிகம், கமரம், கும்பம் இவற்றிற்கு பகை

இந்த பொருத்தம் பார்க்கும் பொழுது, கடகம், கன்னி ஆகிய இரண்டிற்கு மட்டும் ஒரே இராசியாக ஆணும் பெண்ணும் இருப்பது நல்லதல்ல.

அப்படி ஒன்றாக இருப்பின், குறைந்தது 9 பொருத்தங்கள் வந்தால் மனம் முடிக்கலாம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

HOSURONLINE ASTROLOGY

Have a Question About Your Future?

Explore Traditional Online Prasanna Jothidam through different approaches to question-based Vedic astrology.

Kerala Prasnam

Explore traditional Kerala Prasna astrology and its question-based astrological approach.

கேரள பிரசன்னம்

Vetrilai Prasannam

Discover the traditional betel leaf based Prasanna method and its cultural significance.

வெற்றிலைப் பிரசன்னம்

உங்கள் எதிர்காலம் குறித்து கேள்வி உள்ளதா?
கேரள பிரசன்னம், வெற்றிலைப் பிரசன்னம் உள்ளிட்ட பாரம்பரிய பிரசன்ன ஜோதிட முறைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

Explore marriage, career, business, relationships and other important life questions through traditional Prasanna astrology.

Explore Online Prasanna Jothidam →
இலவச பிரசன்ன ஜோதிடம்
HosurOnline Horoscope & Tamil Astrology

Your Daily Tarot Reading