ADVERTISEMENT

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?

துவி துவாதச தோஷம் என்றால் என்ன? துவி துவாதச தோஷம் என்றால் என்ன?

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது துவி துவாதச தோஷம் பார்க்க வேண்டும் என சில சோதிடர்கள் கூறுவதையும், சிலர் அந்தகைய தோஷம் பார்க்க தேவை இல்லை என சொல்வதையும் கேட்டிருக்கிறோம்.

துவி துவாதச தோஷம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை முதலில் பார்க்கலாம்.

திருமண பொருத்தம் பார்க்கும் போது, தினம் பொருத்தம் என்கிற விண்மீன் பொருத்தம் பார்ப்பது கட்டாயம்.

எல்லா பொருத்தங்களையும் விட தினம் பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

தினம் பொருத்தம் பார்ப்பதற்கு, பெண்ணின் விண்மீன் துவங்கி ஆணின் விண்மீன் வரை எண்ணினால், அது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 24, 26 மற்றும் 27 ஆம் நிலையில் இருந்தால் பொருத்தம் என எடுத்துக் கொள்கிறோம்.


துவி துவாதச தோஷம்


இப்படி 22 ஆம் நிலை உள்ள ஆண் பொருத்தம் தான் என்றாலும், ஆண் அந்த விண்மீனின் 4 ஆம் தடத்தில் - பாதம் பிறந்திருந்தால் அது துவி துவாதச தோஷத்தை ஏற்படுத்துகிறது.

27 ஆம் நிலை உள்ள விண்மீனில் ஆண் பிறந்திருந்தால் தின பொருத்தம் சரி என்றாலும், ஆணின் ராசியும் பெண்ணின் ராசியும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையேல் அது துவி துவாதச தோஷத்தை ஏற்படுத்தும்.

பெண் ராசியில் துவங்கி ஆண் ராசி 12 ஆம் நிலையில் இருந்தாலும், ஆண் ராசியில் துவங்கி பெண் ராசி 2 ஆம் நிலையில் இருந்தாலும், விண்மீன் 27 ஆம் நிலை என்று இருக்குமேயானால் அது துவி துவாதச தோஷத்தை ஏற்படுத்தும்.

துவி துவாதச தோஷம் ராசி பொருத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, ராசி பொருத்தம் இருந்தாலும், இந்த துவி துவாதச தோஷம் இருப்பதால், ராசி பொருத்தம் இல்லை என கணக்கிட வேண்டும்.

ராசி பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. ராசி பொருத்தம் இல்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தால் போதும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading