கோள்கள் ஒரு இராசியில் பயணிப்பதை வைத்து அதற்கான பெயற்சி பலன்களை கணித்து சொல்கிறோம்.
அதே வேளையில், ஒரு கோள் ஒரு இராசியில் பயணிக்கும் பொழுது அது தான் முதலில் பயணித்த இராசியையும், அடுத்ததாக பயணிக்க இருக்கும் இராசியையும் பார்க்கும் தன்மை கொண்டது என ஆருடம் பயின்றோர் எடுத்துரைக்கின்றனர்.
அதாவது, கோள்கள், தாங்கள் இருக்கும் இராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாறுமுன், அந்தந்த அடுத்த ராசியின் குணங்களை பெயற்சிக்கு முன்னதாகவே அடயப்பெற்று, அதற்கு தக்கவாறு அடுத்த ராசியின் பலன்களை இராசிக்காரருக்கு கொடுக்க துவங்கிவிடும்.
அதாவது,
ஞாயிறு - 5 நாட்கள் முன்னதாக
அறிவன் மற்றும் வெள்ளி - 7 நாட்கள் முன்னதாக
செவ்வாய் - 8 நாட்கள் முன்னதாக
வியாழன் - 2 திங்கள் முன்னதாக
காரி - 6 திங்கள் முன்னதாக
இராகு மற்றும் கேது - 3 திங்கள் முன்னதாக
இதன்படி பார்த்தால், வியாழன் (குரு), பெயற்சி நவம்பர் திங்களில் என்றாலும், வியாழன் தனது தன்மையை செப்டம்பர் திங்கள் முதற்கொண்டே மாற்ற துவங்கிவிடும்.