சில ராசிக்காரர்கள் தங்கத்தை வாங்கி குவித்துக் கொண்டே இருக்க சிலருக்கோ வாங்கிய சில துளி தங்கமும் வீட்டில் நிலைத்து இருக்காமல் அடகுக்கடை நோக்கியோ அல்லது விற்று செலவு செய்யவும் நிலை ஏற்படுகிறது.
இத்தகைய நிலை எதனால்?
மஞ்சள் நிறம் என்பது மங்களத்தின் அடையாளம். பெண்கள் பலருக்கும் தங்கம் என்றே பெயர் இருக்கும். மங்களத்தின் அடையாளமான பெண்கள் தங்கம் என்று பெயர் சூட்டிக் கொள்வதில் வியப்பு என்ன?
முதலில் யாரிடம் தங்கம் தங்கி நிற்கும் என்று பார்க்கலாம்!
வியாழன் நிலவு இராசிக்கு அல்லது லக்கினத்திற்கு 1 4 5 7 9 10 ஆகிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகர் சேர்க்கையுடன் மகிழ்வான வாழ்வை கொண்டிருப்பார்.
அதேபோல வியாழனின் விண்மீன்கள் புனர்பூசம் விசாகம் அல்லது பூரட்டாதி ஆகிய ஏதாவது ஒரு விண்மீனில் பிறந்த ஜாதகருக்கு வியாழன் பலம் பெற்றிருந்தால் மங்களமான மஞ்சள் நிற தங்கம் சேரும் என்று கூறினால் மறுப்பதற்கில்லை.
ஒருவருடைய ஜாதகத்தில் 4 7 10 ஆகிய இடங்களுக்கு வியாழன் உரிமையாளர் ஆகி நின்றால் அவரிடம் தங்கம் தானாக சேர்ந்துகொண்டே இருக்கும்.
வியாழன் 5 9 ஆகிய திரிகோண இடங்களில் வலுத்து இருந்தால் அவரிடம் பொன் பொருள் சேர்க்கை என்பது மிகுதியாகவே உண்டாகும்.
வியாழன் தனது நண்பர்களான ஞாயிறு நிலவு செவ்வாய் ஆகியோருடன் சேர்ந்து இருந்தாலும் தங்கம் சேரும்.
அடுத்து... தங்கம் யாரிடம் தங்காமல் போகும் என்று பார்க்கலாம்!
அறிவனும் வெள்ளியும், வியாழனுக்கு எதிரிகள். எதிரிகள் வீட்டில் வியாழன் தாங்குவாரா?
ஆகவே அறிவனின் ராசிகளான மிதுனம் கன்னி ஆகியவை ஒருவரது ராசியாகவோ லக்னமாக அமைந்து இருக்குமேயானால் அவரிடம் தங்கம் தங்காமல் போகும்.
அதேபோல வெள்ளியின் ராசிகளான ரிஷபம் துலாம் ஆகியவற்றில் ஒருவர் பிறந்து இருந்தாலோ அல்லது லக்கணமாக கொண்டிருந்தாலோ அவரிடமும் தங்கம் தங்காது.
மேஷம் மற்றும் மகர ராசியில் பிறந்தவர்களுக்கும் அவற்றை லக்கணமாகக் கொண்டு உள்ளோருக்கும் வியாழன் செலவிற்கான அரசர் ஆகி நிற்கிறார். ஆகவே இவர்களிடமும் தங்கம் தங்காது.
இத்தகைய அமைப்புகள் கொண்டோர் தங்கத்தை வாங்கி சேமித்து வைத்தாலும் அவை திருடு போவதற்கான வாய்ப்புகள் பெரிதும் உண்டு.