ADVERTISEMENT

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

மரண யோகம்,  சித்த யோகம், அமிர்த யோகம் மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று.


மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும்.


எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத நாள் உண்டாகும்?

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட விண்மீன் சேர்ந்து அந்த கிழமையும் வந்தால் அது மரண யோகம்.

ஞாயிற்றுக் கிழமை: அவிட்டம், கார்த்திகை

திங்கள் கிழமை: அசுவிணி, உத்திராடம்

செவ்வாய் கிழமை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை

அறிவன் (புதன்) கிழமை: அஸ்தம்

வியாழக் கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை

வெள்ளிக் கிழமை: ரோகிணி, மகம், திருவோணம், ஆயில்யம்

காரி (சனி) கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்

மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த விண்மீன்கள் சேர்ந்து வந்தால் அன்று மரண யோகம்.

இந்த மரண யோக நாளில் நல்ல செயல்களை செய்வது ஆகாது.

மரண யோகம் என்பது மரணத்தைக் குறிப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அன்றைய நாள் செய்யும் எந்த செயலும் முழுமை அடையாது. அதனால் தான் அன்றைய நாள் நல்ல செயல்களை தவிர்க்கச் சொல்கிறார்கள்.


குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் சித்த யோகம்.

சித்த யோகம் கூடிய நாளை எப்படி கணக்கிடுவது?

1 – 6 – 11 வது நிலவு நாட்களான பிரதமை, சஷ்டி, ஏகாதசி , இவை வரும் நாள் வெள்ளி கிழமையாக இருந்தால்

அல்லது

2 – 7 – 12 வது நிலவு நாட்களான துவிகை, சப்தமி, துவாதசி இவை வரும் நாள் அறிவன் (புதன்) கிழமையாக இருந்தால்

அல்லது

3 – 8 – 13 வது நிலவு நாட்களான திருதிகை, அஷ்டமி, திரியோதசி இவை வரும் நாள் செவ்வாய் கிழமையாக இருந்தால்

அல்லது

4 – 9 – 14 வது நிலவு நாட்களான சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி இவை வரும் நாள் வியாழக் கிழமையாக இருப்பின் சித்த யோகம் கொண்ட நாட்களாகும்.

சித்த யோகம் உள்ள நாட்களில், துவங்கும் செயல்கள் வெற்றி தரும்.

சித்த யோகம் கொண்ட நாளில் முழுமை கண்டிப்பாக கிடைக்குமா என்றால், அப்படியெல்லாம் உறுதி எதுவும் இல்லை. ஒரு சிலருக்கு மரண யோகமே நன்றாக இருக்கும். அதாவது அவர்களுக்கு ஜாதகமே எதிர்மறையாக இருக்கும். அதனால் அவர்களுக்கு மரண யோகம் நல்ல பலனைக் கொடுக்கும்.


அமிர்த யோகம்

1 – 6 - 11 நிலவு நாட்கள் இருக்கும் நாள் ஞாயிற்று கிழமையாகவோ

அல்லது

2 – 7 – 12 – நிலவு நாட்கள் இருக்கும் நாள் திங்கள் கிழமையாகவோ

அல்லது

3 – 8 – 13 – நிலவு நாட்கள் இருக்கும் நாள் அறிவன் (புதன்) கிழமையாகவோ

அல்லது

1 – 6 – 11 – நிலவு நாட்கள் இருக்கும் நாள் செவ்வாய் கிழமையாகவோ

அல்லது

4 – 9 – 14 – நிலவு நாட்கள் இருக்கும் நாள் வியாழக் கிழமையாகவோ

அல்லது

2 – 7 – 12 – நிலவு நாட்கள் இருக்கும் நாள் வெள்ளிக் கிழமையாகவோ

அல்லது

5 – 10 – 13 – நிலவு நாட்கள் இருக்கும் நாள் காரி (சனி) கிழமையாகவோ இருந்தால் அந்த நாள் அமிர்த யோகம் கொண்ட நாளாக கணக்கிடப்படுகிறது.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading