காரி தசையில், முதலில் துவங்குவது காரி புக்தி. அதை தொடர்ந்து அறிவன் (புதன்), கேது என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.
பூசம், அனுசம் மற்றும் உத்திரட்டாதி விண்மீன்கள் காரி தசையை முதலாவதாக கொண்டிருக்கும்.
காரி தசையில் புக்திகளில் நேர அளவு:
காரி புக்தி 3 ஆண்டு 3 நாள்
அறிவன் 2 ஆண்டு 8 திங்கள் 9 நாள்
கேது 1 ஆண்டு 1 திங்கள் 9 நாள்
வெள்ளி 3 ஆண்டு 2 திங்கள்
ஞாயிறு 11 திங்கள் 12 நாள்
நிலவு 1 ஆண்டு 7 திங்கள்
செவ்வாய் 1 ஆண்டு 1 திங்கள் 9 நாள்
இராகு 2 ஆண்டு 10 திங்கள் 6 நாள்
வியாழன் 2 ஆண்டு 6 திங்கள் 12 நாள்
1. காரி புக்தி: நோய் உண்டாகும். செல்வம் இழக்க நேரிடும். உற்றார் உறவினருடன் அனுசரித்து செல்லுதல் நலம். வேலையாட்கள் பணி விலகுவர்
.
2. அறிவன் புக்தி: ஞானம், அறிவு, ஆற்றல், கல்வி நிலை உயரும். பொருளும் செல்வமும் வந்து சேரும். பிள்ளைகள், உற்றார், உறவினர்களால் நன்மை கிடைக்கும்.
3. கேது புக்தி: வலது பகுதி உடலில் நோய் நோக்காடுகள் வந்து விலகும். பிள்ளைகளுக்காக செல்வத்தை அழிக்க நேரிடும். பெண்களால் பகை உண்டாகும். நச்சுப் பொருட்களால் கேடு உண்டாகும்.
4. வெள்ளி புக்தி: நல்லவர்கள், வல்லவர்கள், செல்வந்தர்கள், அறிவாளிகள் ஆகியோருடன் நட்பு கிடைக்கும். பிற பாலினத்தவர் மீது ஈர்ப்பு உண்டாகும். பகை வந்தாலும் அவை நன்மைக்கே.
5. ஞாயிறு புக்தி: உணவில் எச்சரிக்கையுடன் இருங்கள். மாசு, தூசு இவற்றில் இருந்து விலகி இருங்கள். வாழ்கை துணை மற்றும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். எடை கூடிய பொருட்களை கையாளாதீர்கள்.
6. நிலவு புக்தி: சன்டை, சச்சரவு, பகை, எதிரிகள் என வழக்குகளில் சிக்குவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் ஏற்படும். பொருள் சேதம் ஏற்பட்டாலும் அது குறித்து கவலைப்பட வேண்டாம். துன்பம் துயரம் என்பது வாழ்வில் என்றும் வந்து செல்வதே.
7. செவ்வாய் புக்தி: கொடிய பகை உண்டாகும். பழியும் பழிச்சொல்லும் கிடைக்கும். பலரது பகை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வீடு மாறுதல் ஏற்படும்.
8. இராகு புக்தி: பொன் பொருள் இழப்பு ஏற்படலாம். கவலை வேண்டாம். பகை நன்மையில் முடியும். முடிந்தவரை பிறரிடம் புறம் கூறாமை நல்லது.
9. வியாழன் புக்தி: அன்பு, பாசம், காதல், நட்பு என நன்மைகள் வரும் நேரமிது. அரசால் நன்மை கிடைக்கும். எதிர்பாரா நன்மைகள் கிடைக்கும். நினைப்பதெல்லாம் கைகூடும். உற்றார் உறவினர் மீண்டும் நட்பு பாராட்டுவர்.