2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்?
குரு பெயற்சி என்கிற வியாழன் கோள் ஒரு இராசியில் இருந்து அடுத்த இராசிக்கு பெயற்சி அடைவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் ஐந்திறன் நாள் காட்டியில் உள்ள வேறுபாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆம், பன்சாங்கம் என்று வட சொல்லில் அழைக்கப்படுகிற ஐந்திறன் நாள் காட்டி இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒன்று, பழைய முறையை பின்பற்றும் வாக்கிய பஞ்சாங்கம். இந்த முறை பஞ்சாங்கத்தில் கணிக்கப்படும் கோள்களின் நிலை அறிவ்யலுடன் ஒத்து வராது. ஏனெனில், இது தோராயமாக கணிக்கப்படும் முறையாகும்.
இந்த வாக்கிய பஞ்சாங்கம் என்கிற ஐந்திறன் நாள் காட்டியின் மூலம் வியாழனின் நிலை கணிக்கப்பட்டால், வியாழன் பெயற்சியானது வரும் ஐப்பசி திங்கள் 12 ஆம் நாள் நடை பெறுகிறது. ஆங்கில நாள்காட்டியின் படி 29.10.2019 அன்று குரு பெயற்சி நடைபெறுகிறது.
அறிவியல் முறையை பின்பற்றும் திரு கணித ஐந்திறன் நாள் காட்டி கணக்கின் படி குரு பெயற்சி என்கிற வியாழன் பெயற்சியானது வரும் ஐப்பசி திங்கள் 19 ஆம் நாள் நடை பெறுகிறது. ஆங்கில நாளில் 05.11.2019 அன்று நடைபெறுகிறது.
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி குரு பெயற்சியை கணிப்பது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குருவின் தலைவீடாக கருதப்படும் ஆலங்குடி குரு கோவில் ஆகும்.
இங்கு ஐப்பசி திங்கள் 12 ஆம் நாள் குரு பெயற்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று விடிகாலை .49 க்கு சித்த யோகம், கன்னி லக்னத்தில் குருபகவான் விருச்சிக இராசியிலிருந்து தனுசு இராசிக்கு இடப் பெயர்ச்சி அடைகிறார்.
காளமேகப் புலவர் ஆலங்குடி கோவிலை குறித்து அற்புதமாக பாடியுள்ளார்.
"ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம்
குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம்
மடியாரோ மண் மீதினில்'.
என்று அவர் பாடி இந்த ஆலயத்தின் பெருமையை உணர்த்துகிறார்.
வியாழன் கோளின் தலை விடாக விளங்கும் ஆலங்குடி திருக்கோவில் சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் சோழ அரசர்களால் கட்டப்பட்டது.
தேவாரப் பாடல் சிறப்பு பெற்ற காவிரி தென்கரை இருக்கும் கோவில்களில் இது 98வது கோவிலாகும். இங்கு மூலவர் ஆபத்சகாயர் தன் எழுச்சி பெற்ற லிங்கமாக அருள் பாலிக்கிறார்.
இந்த ஆலயத்தின் அம்மன் ஏலவார்குழலி. வடுகர்கள் இந்த அம்மனுக்கு தற்பொழுது பிற வட மொழி சொற்கள் பெயர்களை சூட்டி உள்ளனர்.
மேலும், விகாரி ஆண்டு பங்குனி திங்கள் 15-ம் நாள் 28.3.2020 காரி (சனி) கிழமை அன்று குருபகவானின் அதிசாரம் தொடங்குகிறது. கிட்டதட்ட 90 நாட்கள்
அதிசாரத்தில் இருப்பார்.
தனுசு இராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு ஆண்டு அந்த இராசியில் இருந்து கொண்டு அருளாசி வழங்குவார்.
தனுசு இராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ இராசியையும், ஏழாம் பார்வையால் மிதுன இராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்ம இராசியையும் பார்க்கிறார்.
குரு இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் இடத்திற்கான பலமே கூடுதலான நன்மைகள் பெறும். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் முழுமையான பலன்கள் பெறும்.