ஏற்கனவே நாம் ஆரூடத்தில் பயன்படுத்தப்படும், ராகு மற்றும் கேது தவிர்த்த பிற 7 கோள்கள் தமக்கென சில ராசிகளை தமது வீடுகளாக உரிமை கொண்டிருக்கும், அதாவது ஆட்சி வீடுகளாக கொண்டிருக்கும் என அறிந்தோம்.
தொடர்து, ஒன்பது கோள்களும் சில குறிப்பிட்ட ராசி வீடுகளில் இருந்தால் அவை தமது வீட்டில் இருப்பதைக் காட்டிலும் 125% வலு கூடிய நிலையில், உயர்வான நிலை கொண்டிருக்கும் என்பதையும், அதை உயர்வான (உச்ச) நிலை என்று குறிப்பிடுகிறோம் என்பதையும் அறிந்தோம்.
இங்கே நாம் குறிப்பிடுவது, தமது வீடு அல்லது தமது உயர்வான நிலை வீடு தவிர்த்து பிற குறிப்பிட்ட ராசிகளில் கோள்கள் இருக்கும் நிலையில், அவை அந்த வீடுகளை நட்பு வீடுகளாக கொண்டிருக்கும் என்பதை குறித்து அறிவோம்.
எல்லா கோள்களுக்கும், நட்பு வீடு என்று ஏதாவது ஒரு ராசி வீடு இருக்கும் நிலையில், கடகம் ராசி மட்டும் எந்த கோளையும், நட்பு வீடாக ஏற்றுக்கொள்ள விடவில்லை. அதாவது, திங்கள் (நிலவு), தமது உரிமை வீடாக கொண்டுள்ள கடகம் ராசி, பிற எந்த கோள்களுக்கும், நட்பு வீடாக அனுமதிக்கப்படுவதில்லை.
ஞாயிறு: விருச்சகம், தனுசு மற்றும் மீனம்
திங்கள்: மிதுனம், சிம்மம் மற்றும் கன்னி
செவ்வாய்: சிம்மம், தனுசு மற்றும் மீனம்
அறிவன் (புத): ரிஷபம், சிம்மம் மற்றும் துலாம்
வியாழன்: மேஷம், சிம்மம், கன்னி மற்றும் விருச்சிகம்
வெள்ளி: மிதுனம், தனுசு, மகரம் மற்றும் கும்பம்
காரி (சனி): ரிஷபம், மிதுனம் மற்றும் கன்னி
ராகு - கேது: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலின்படி, ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - அறிவன் மற்றும் காரி ஆகியவை 3 ராசி வீடுகளை நட்பு வீடுகளாக கொண்டுள்ளன. வியாழன் மற்றும் வெள்ளி ஆகியவை 4 ராசி வீடுகளை நட்பு வீடுகளாக கொண்டுள்ளன. தமக்கென உரிமையாக எந்தராசி வீட்டையும் ஆட்சி செய்ய கொண்டிராத ராகு - கேது, 6 ராசி வீடுகளை நட்பு வீடுகளாக கொண்டுள்ளன.