கணப் பொருத்தம் என்றால் தம்பதியர் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையுடன் வாழ்வார்களா என்பதற்கான பொருத்தமாகும்.
ஒரே விட்டில் பிறந்த குழந்தைகள் ஒரே குணத்தில் இருப்பது இல்லை. இந்நிலையில் வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்த ஆணும் பெண்ணும் ஒரே குணத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு வெவ்வேறு குணமும் மன நிலையும் கொண்ட இரு பாலினத்தவர் ஒன்றாக வாழும் போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வருவது இயற்கையே.
இந்த வேறுபாடுகள் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக, ஜோதிட முறையில் ஆண் மற்றும் பெண்ணின் விண்மீன்களின் பொருத்தத்தை பார்த்து திருமணம் முடிக்கின்றனர்.
அதில் கணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தமாகிறது.
கணம் என்ற வட மொழி சொல், குழு என்பதாக பொருள் படுகிறது.
இந்த கணப் பொருத்தம் பார்ப்பதற்காக, சோதிடத்திற்கு பயன்படும் 27 விண்மீன்களை மூன்று இன குழுவாக பிரிக்கின்றனர்.
கடவுள் (தேவ கணம்), மனிதன் குணம் மற்றும் கொடுங் குணம் (அசுர கணம்) என்று மூன்றாக பிரிக்கப்படுகிறது.
இதில் தேவ கணம் உள்ளவர்கள் திடமிக்க மனம் கொண்டவர்கள்.
அசுர கணம் உள்ளவர்கள், திடமிக்க உடல் அமைப்பு பெற்றவர்கள்.
மனித கணம் உள்ளவர்களுக்கு, தேவ கணம் மற்றும் அசுர கணம் இரண்டும் இருக்கும்.
தேவக் கணம் : அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருவோணம், ரேவதி.
மனித கணம் : பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.
இராட்சத கணம் : கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.
ஆண் பெண் இருவரும் ஒரே கணமாக அமைந்திருந்தால் அதனை மிகச் சிறந்த பொருத்தமாகக் கருத வேண்டும்.
ஆண் தேவ கணமும் பெண் மனித கணமுமாக இருந்தால் சிறப்பு. இதுவும் மிக நல்ல கணப் பொருத்தம்.
பெண் தேவ கணமாகவும், ஆண் மனித கணமாகவும் இருந்தால் ஓரளவு பொருந்துகிறது எனலாம்.
பெண் மனித கணமும் ஆண் இராட்சத கணமுமாக இருந்தால் அது பொருந்தாது.
பெண் இராட்சத கணமாகவும் ஆண் தேவ கணமுமாக இருந்தால் அது பொருந்தாது.
கடகம் - மகரம், சிம்மம் - கும்பம் போன்றவை சரி நிலை இராசிகள். இத்தகைய இராசி அமைப்பு கொண்ட பெண் மற்றும் ஆணுக்கு கண்டிப்பாக கணப் பொருத்தம் பார்க்க வேண்டும்.
பெண் இராட்சத கணமாகவும் ஆண் மனித கணமாகவும் இருக்கும் போது பெண்ணின் விண்மீன்ஆண் விண்மீனிற்கு 14 இடங்களுக்கு தள்ளி இருந்தால் அந்தப் பெண் இராட்சத கணமானாலும் பொருந்துகிறது எனலாம்.
பெண்ணின் இராசியின் இறைவனும் ஆணின் இராசி இறைவனும் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்றவர்களாக அவர்களது ஜாதகத்தில் இருப்பார்களானால் பெண் இராட்சத கணமானால் பொருந்துகிறது எனலாம்.
பெண்ணின் இராசியும் ஆணின் இராசியும் ஒரே இராசியாக அமையுமானால் இந்த கணப்பொருத்தம் தேவை இல்லை.
இப்படி இராசி பொருத்தம் இருந்தாலும், ஆண் விண்மீனின் தடம், பெண் விண்மீனின் தடத்தை விட முந்தையதாக இருக்க வேண்டும்.
மேலும், பெண்ணின் இராசியில் இருந்த ஆணின் இராசி ஏழாவது இடத்தில் இருந்தாலும் அந்த இராசிகள் ஒன்றுக்கு ஒன்று பொருந்துகிறது என கணக்கிடலாம்.
மேஷம் - துலாம், ரிஷபம் - விருச்சிகம், மிதுனம் - தனுசு, கன்னி - மீனம் என்ற இராசிகளைப் பொருத்தவரை ஒன்று பெண் இராசியாகவும் மற்றொன்று ஆண் இராசியாகவும் அமைந்தால் அத்தகைய இராசியுடையவர்களையும் கணப் பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் முடிக்கலாம்.
ஆண் | தேவ கணம் | பொருந்துகிறது |
பெண் | தேவ கணம் | |
ஆண் | மனுத கணம் | பொருந்துகிறது |
பெண் | தேவ கணம் | |
ஆண் | ராட்சத கணம் | நடுநிலை |
பெண் | தேவ கணம் | |
ஆண் | மனுத கணம் | பொருந்துகிறது |
பெண் | மனுத கணம் | |
ஆண் | தேவ கணம் | பொருந்துகிறது |
பெண் | மனுத கணம் | |
ஆண் | ராட்சத கணம் | நடுநிலை |
பெண் | மனுத கணம் | |
ஆண் | தேவ கணம் | பொருந்தவில்லை |
பெண் | ராட்சத கணம் | |
ஆண் | மனுத கணம் | பொருந்தவில்லை |
பெண் | ராட்சத கணம் | |
ஆண் | ராட்சத கணம் | பொருந்தவில்லை |
பெண் | ராட்சத கணம் |