ஆமை நுழைந்த குடியும், ஆமினா நுழைந்த குடியும் உருப்படாது, என்று ஒரு பழமொழி உண்டு.
அப்படியானால் குழந்தைகள் விளையாட பயன்படும் ஆமை பொம்மையை வீட்டினுள் வைக்கலாமா? என்கிற கேள்வி பல நேரங்களில் வருகிறது.
சீன இராசி பொம்மைகளில் ஆமை பொம்மையும் ஒன்று. அதே நம்பிக்கை மற்ற பிற தொலை கிழக்கத்திய நாடுகளான தாய்லாந்து, சப்பான், சிங்கப்பூர், வியட்னாம், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் உள்ளன.
அவர்கள் ஆமை பொம்மையை கல்லாபெட்டி அருகே வைத்து அதனால் வருவாய் பெருகி செல்வம் சேர்வதாக நம்புகின்றனர்.
அப்படியானால் ஆமை பொம்மை வடிவிலாவது வீட்டில் இருப்பது நல்லதா?
ஆம் என்கிறது சீன ஃபெங்க்சுயி முறை.
அதாவது, ஆமை எப்படித் தன் ஐந்து உறுப்புகளையும் (தலை மற்றும் கால்கள்) உள்ளடக்கிக் கொண்டு எதிரிகளிடமிருந்து தன்னை தானே தற்காத்துக் கொள்கிறதோ அதே போல பிறர் கண் பட்டாலும் நம்மை அவர்களின் தீய கண்களில் இருந்து காக்க உதவுகிறது இந்த ஆமை வடிவம்.
எங்கு வைக்க வேண்டும் இந்த ஆமை வடிவத்தை?
உலோகத்தால் செய்யப்பட்ட ஆமையை, நீர் நிறைந்த ஒரு குவளையில் இட்டு, வீட்டினுள் வடக்கு திசையில் வைக்க வேண்டும். வடக்கில் படுக்கை அறை அமைந்திருக்குமானால், வெறும் உலோக ஆமையைப் பராமரிக்கலாம். இப்படிச் செய்வதால் பொருளாதார மேம்பாடு, பகைவரை வெல்லுதல், நீண்ட ஆயுள், பொறுமை முதலான பல பலன்களை நம்மால் ஈட்ட முடியும்.
ஆமை கோவில்:
ஆமைக்கு என்றே ஆந்திர மாநிலம் ச்றீகாகுளத்தில் ஒரு கோவில் உள்ளது. இது பழம்பெரும் வரலாற்று சிறப்பு கொண்ட கோவிலாகும்.
சென்னையில் இருந்து இந்த கோவில் வெறும் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த புவியில் ஆமை கோவில் இந்த கோவிலை தவிர வேறெங்கும் இல்லை. அத்துனை சிறப்பு கொண்டது இந்த கோவில்.
இங்கு சென்று வழிபட்டால், பகைவர்கள் எத்தனை வலிமையுள்ளவராக இருந்தாலும், நம்மை அவர்களால் தீண்ட முடியாது.