மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன?
திருமண வாழ்க்கையின் அடுத்தகட்டமான குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவதுதான் மகேந்திரப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது.
மகேந்திரப் பொருத்தம் இருந்தால் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உறுதி அளிக்கப்படுகிறது. அதாவது பிள்ளை பேறு ஒன்றுக்கும் மேற்பட்டதாக இருக்கும்.
பெண்ணின் விண்மீனில் துவங்கி ஆண்ணின் விண்மீன் வரை எண்ணி வந்தால் அதன் தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவதாக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு.
மற்ற எண்களில் முடிபவை பொருத்தமில்லை என கொள்ளவும்.
தினப் பொருத்தம், யோனி பொருத்தம் எந்தளவிற்கு அடிப்படை பொருத்தங்களாக பார்க்கப்படுகிறதோ அந்தளவிற்கு இந்த பொருத்தமும் தேவையான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த மகேந்திர பொருத்தம் கட்டாயம் தேவை என்றாலும் இராசிப் பொருத்தம் இருந்து இந்த பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் முடிக்கலாம்.
அதாவது இராசி பொருத்தம் அல்லது மகேந்திர பொருத்தம், இவற்றில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மகேந்திர பொருத்தத்தில் சிறப்பான பொருத்தமாக கருதப்படுவது பெண்ணின் விண்மீனில் துவங்கி ஆண்ணின் விண்மீன் வரை எண்ணி வந்தால் அதன் தொகை 4, 13, 22 ஆவதாக வருவதாகும்.