ஆருடத்தை பொருத்தவரை, சில விண்மீன்களுக்கு தலை கிடையாது, சிலவற்றுக்கு உடனே கிடையாது, சிலவற்றிற்கு கால் கிடையாது. இத்தகைய உடல் ஊனம் அமைப்பு கொண்ட விண்மீன்களை கொண்ட நாட்களில், முதலிரவு போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்தல் கூடாது.
எந்தெந்த விண்மீன்களுக்கு எந்தெந்த அங்கங்கள் இல்லை என பார்க்கலாம்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள். ஆகவே இந்த விண்மீன்களைக் கொண்ட நாளில் சாந்தி முகூர்த்தம் எனும் முதலிரவு வைக்கக்கூடாது.
அடுத்ததாக, மிருகசிரீடம், சித்திரை,அவிட்டம் ஆகிய இந்த மூன்று விண்மீன்களுக்கு உடல் கிடையாது என்கிறது ஆருட வல்லுநர்களால் இயற்றப்பட்ட நூல்கள்.
காலற்ற விண்மீன்கள் எவை என்றால், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய இந்த மூன்றையும் குறிக்கின்றன ஆருட கணிப்புகள்.
இந்த தலையற்ற, உடலற்ற மற்றும் காலற்ற விண்மீன் நாட்களில் முதலிரவு மட்டும் வைக்கக்கூடாது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த விண்மீன் நாட்களில் நல்ல செயல்களுக்காக மேற்கொள்ளப்படும் பயணங்களையும் தவிர்க்க வேண்டுமாம். மேலும், இந்த விண்மீன்களை வீடு கட்ட துவங்கும் மற்றும் புதுமனை குடிபுகும் நாட்களுக்கும் தவிர்க்க வேண்டும்.
இந்தக் கருத்துக்களை உள்ளடக்கி, புலிப்பாணி ஜோதிடர் பாடிய பாடல்:
காலற்ற உடலற்ற நாளிற்
கோலக் குய மடவார் தமைக் கூடின் மலடாவார்
மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத் தயர் வழி போகினும் நலமெய்திடாரே.