நிலவு தசை நடைபெறும் பொழுது புக்திகளால் என்ன பலன் எற்படும்? தசைக்கு ஏற்றவாறு புக்திகளின் பலன்களும் மாறுபடும்.
நிலவு தசையில் முதலில் வருவது நிலவு புக்தி. அடுத்து செவ்வாய் என ஒவ்வொன்றாக வந்து செல்லும். நிலவு தசையின் மொத்த நேர அளவு 10 ஆண்டுகள்.
நிலவு தசையில் புக்திகளின் நேர அளவுகள்:
1. நிலவு 10 திங்கள்
2. செவ்வாய் 7 திங்கள்
3. இராகு 1 ஆண்டு 6 திங்களும்
4. வியாழன் 1 ஆண்டு 4 திங்களும்
5. காரி (சனி) 1 ஆண்டு 7 திங்களும்
6. அறிவன் (புதன்) 1 ஆண்டு 5 திங்களும்
7. கேது 7 திங்கள்
8. வெள்ளி (சுக்கிரன்) 1 ஆண்டு 8 திங்களும்
9. ஞாயிறு 6 திங்கள்
நிலவு தசையில் புக்திகளின் பலன்:
நிலவு புக்தி: பெண்களின் சேர்க்கை கிட்டும். வீரமும், அது தொடர்பான என்னங்களும் வரும். நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். உடல் வலிமை கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்சி கிடைக்கும்.
செவ்வாய் புக்தி: தேவையே இல்லாமல் நீதிமன்றம் செல்ல நேரிடும். சண்டை, சச்சரவுகளுக்கு குறை இருக்காது. திருட்டு, நோய், செல்வம் அழிவு என பாதிப்புகள் உண்டாகும். சித்திரை திங்களில் இந்த புக்தி நடைபெற்றால் கால்நடைகளால் பாதிப்பு ஏற்படும்.
இராகு புக்தி: செழிப்பான நாடுகளுக்கு பயணிப்பீர்கள். பகைவர்களால் தொல்லை ஏற்படும். நோய் உண்டாகும். ஆண் பெண் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்.
வியாழன் புக்தி: வெற்றி வந்து சேறும். செல்வம் செழிக்கும். அரசு உதவிக்கு வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
காரி புக்தி: கேடாக அமையும். கரு உண்டாகமல் இருப்பது நல்லது. செல்வத்திற்கு அழிவு உண்டாகும். மனதில் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.
அறிவன் புக்தி: நினைப்பவை எல்லாம் நடந்தேரும். கல்வி உயரும். வருவாய் பெருகும். மகிழ்வு இரட்டிப்பாக கிடைக்கும்.
கேது புக்தி: நெருப்பால் பாதிப்பு. உடல் வலி ஏற்படும். உற்றார் உறவினர் ஒருவரை இழப்பீர்கள். பகை உண்டாகும்.
வெள்ளி புக்தி: நோய் உண்டாகும். நல்லவற்றை விட தீயவையின் செயல் ஓங்கி நிற்கும்.
ஞாயிறு புக்தி: உடல் வலி ஏற்படும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படும். சிறப்பாக எதுவும் இருக்காது.