ADVERTISEMENT

தனுசு லக்னகாரர்களின் செல்வச் செழிப்பு எப்படி இருக்கும்?

தனுசு லக்னகாரர்களின் செல்வச் செழிப்பு எப்படி இருக்கும்? தனுசு லக்னகாரர்களின் செல்வச் செழிப்பு எப்படி இருக்கும்?

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் பத்தாம் வீட்டிற்கான உரிமையாளர் அறிவன் (புதன்).  அறிவன் என்றாலே அறிவு சார்ந்தது என பொருள்படுகிறது என்பதால், இந்த லக்னக்காரர்களுக்கு அறிவாற்றல், நினைவாற்றல், எதிலும் சிந்தித்து செயல்படக்கூடிய திறமை, என அறிவு சார்ந்த திறன்கள் பல இருக்கும்.

அறிவன் வலுப்பெற்று இருந்தால் ஜாதகக்காரர் தான் செய்யும் தொழில் வேலை ஆகியவற்றில் சிறப்பான உயர்வினை அடைவார்.  அறிவன் தனது நட்பு கோள்களான வெள்ளி, காரி (சனி) ஆகியவற்றுடன் சேர்க்கை கொண்டு வியாழனின் பார்வையும் பெறுமேயானால், ஜாதகர் நிலையான வருவாய் கொண்டு, சிறப்பான வாழ்க்கை வாழ்வார்.

அறிவன் வலுப்பெற்று ஞாயிறு, செவ்வாய் ஆகிய கோள்களில் ஏதாவது ஒன்றுடன் 10ல் அமைந்தால், அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உயர்வான பதவிகளை வகித்து, நிலையான வருவாய் ஜாதகர் ஈட்டுவார்.

காரி வலுப்பெற்று ஞாயிறு அல்லது செவ்வாய் 10ல் இருந்தால் ஜாதகரின் அரசியல் வாழ்க்கை வெற்றிப் படிகளில் ஏறும். மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய பதவிகளில் ஏதாவது ஒன்றில் ஜாதகர் அமர்வார்.

10ல் ஞாயிறு, செவ்வாய் இருந்தாலும், அறிவன் - ஞாயிறு - செவ்வாய் ஆகியவற்றின் சேர்க்கை ஏற்பட்டாலும், அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

அறிவனுடன் 9, 12 ஆகிய வீடுகளின் உரிமையாளர்களான ஞாயிறு - செவ்வாய் இணைந்து, 9, 12 ல் நிலவு, ராகு போன்ற கோள்கள் அமையப்பெற்றால், கடல் கடந்து பார் முழுவதும் தொழில் செய்து செல்வச் செழிப்பை ஈட்டும் அமைப்பு கிடைக்கும்.

அறிவன் வலுப்பெற்று அதனுடன் காரி, வெள்ளி ஆகியவற்றின் சேர்க்கையும் வலிமையும் அமையப்பெற்றால், ஜாதகர் தாமாக தொழில் துவங்கி அதில் கோடான கோடி வருவாய் ஈட்டுவார்.

அறிவன், செவ்வாயுடன் சேர்க்கை பெற்று அமைந்திருந்தால் நிலம் வேளாண்மை ஆகியவற்றின் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுவார்.

10 ல் நிலவுடன் சேர்க்கைப் பெற்று வலுப்பெற்றால் நீர், நீர்மம் தொடர்பான தொழில்களில் ஈடுபடுவார்.

அறிவன் காரியுடன் சேர்க்கை பெற்றால், இரும்பு உலோகம் தொடர்பான தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

அறிவன் வியாழனுடன் சேர்ந்து இருந்தால் வழக்கறிஞர், அரசு பணி ஆகிய தொழில்கள் அமையும்.

அறிவன் வெள்ளியுடன் சேர்க்கைப் பெற்று, திரிகோணத்தில் அமையப் பெற்று, வியாழனின் பார்வை பெறுமேயானால், பெண்கள் வழியில் முன்னேற்றம் மற்றும் செல்வ செழிப்பு அடையக்கூடிய அமைப்பு கிடைக்கும்.

அறிவன், வெள்ளி, நிலவு ஆகியவை இணைந்து, ரிஷபம், கடகம், துலாம் ஆகிய ராசிகளில் ஏதாவது ஒன்றில் அமையப் பெற்றால், கலை, இசை, இலக்கியத்துறை ஆகியவற்றில் ஜாதகர் புகழ் கொண்ட நிலையை அடைவார்.

அறிவன் கூடுதல் வலுப்பெற்றால், கணினி, கணிதம், வங்கி, பங்குச்சந்தை போன்றவற்றில் உயர்வான நிலையை கொண்டவராக ஜாதகர் விளங்குவார்.

கூடுதல் வலுப்பெற்று வியாழனின் பார்வை அல்லது பிற நற்பயன் பயக்கும் கோள்களின் பார்வை பெற்றால், ஜாதகர் ஊடகத்துறை, நூல் வெளியீடு, ஆசிரியர், பேராசிரியர், முனைவர், ஆராய்ச்சியாளர் போன்ற புகழ் பெறக்கூடிய பணிகளில் ஈடுபடுவார்.

தனுசு லக்னத்திற்கு ஏழாவது வீடு, தீங்கிழைக்கும் வீடு என்பதால், ஜாதகர் கூட்டுத் தொழில் செய்வதை முற்றிலுமாக தவிர்த்து எதிலும் தனியாக செயல்பட வேண்டும்.

அறிவன் வலுவிழந்து தீய கோள்கள் இடையே அமையப் பெற்றாலும், அறிவனுக்கு 7 ல் காரி, செவ்வாய், ராகு, கேது போன்ற தீய கோள்கள் இருந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் அடைவதில் பலவகையான தடைகள் ஏற்படும்.

அறிவனுக்கு 7 ல், ராகு - கேது ஆகியவற்றின் சேர்க்கை ஏற்பட்டால், ஜாதகர் சட்டத்திற்குப் புறம்பான தொழிலில் ஈடுபடுவர்.

தனுசு லக்கனத்தை பொருத்தவரை, லக்னத்தின் 7ம் வீடு குறித்து முழுவதுமாக ஆராய்ந்து பலன் கண்டறிய வேண்டும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading