ADVERTISEMENT

கோள்களின் பார்வை - அதனால் ஏற்படும் நன்மை தீமைகள்!

கோள்களின் பார்வை - அதனால் ஏற்படும் நன்மை தீமைகள்! கோள்களின் பார்வை - அதனால் ஏற்படும் நன்மை தீமைகள்!

ஜோதிடத்தில் உள்ள கோள்கள் சிலவற்றுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பல பார்வைகள் உண்டு என்றும், பல கோள்களுக்கு ஒரே ஒரு பார்வை மட்டுமே உள்ளது என ஏற்கனவே நாம் கற்றுத் தெரிந்து உள்ளோம்.

இந்தக் கட்டுரையில் எந்தெந்த கோள்களில் எந்தெந்த பார்வைகள் வலு உடையது என்பதை குறித்து அறிந்து கொள்ளலாம்.  அதில், கால் பார்வை, அரை பார்வை, முக்கால் பார்வை, முழு பார்வை என்பதுகுறித்த பட்டியலும் அதன் பலன்களும் குறித்த விளக்கம்.

ஞாயிறு, திங்கள், அறிவன் (புதன்), வெள்ளி, ராகு மற்றும் கேது ஆகிய கோள்களுக்கு ஏழாம் பார்வை ஒன்று மட்டுமே உள்ளது.  இந்த பார்வையானது, முழு பார்வை ஆகும்.  இந்தப் பார்வையின் பலன், பெருமளவு வலுக்கொண்டது.

காரி (சனி), இந்த கோளுக்கு 3 மற்றும் 10ஆம் பார்வைகள் கால் பார்வை ஆகும்.  காரி-க்கு 7 ஆம் பார்வை இருப்பினும், அந்த ஏழாம் பார்வையை காட்டிலும் இந்த 3 மற்றும் 10ம் பார்வைகள், கால் பார்வை என்ற அளவீடு கொடுக்கப்பட்டிருந்தாலும், வலு உடையவை.

வியாழன், இந்த கோளுக்கு 5 மற்றும் 9ம் பார்வைகள் அரை பார்வைகள் ஆகும்.  வியாழனுக்கு 7ம் பார்வை இருப்பினும், இந்த 5 மற்றும் 9ம் பார்வைகள் வலு உடையவை.

செவ்வாய், இந்த கோளுக்கு 4 மற்றும் 8ஆம் பார்வைகள் முக்கால் பார்வைகள் ஆகும்.  செவ்வாய்க்கு 7ம் பார்வை இருப்பினும், இந்த 4 மற்றும் 8ஆம் பார்வைகள் வலு உடையவை.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளபடி, ஆருட கோள்கள், லக்னத்தில் அல்லது லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் நின்றால் தான் குறிப்பிடப்பட்டுள்ள பார்வை அளவீடு விகிதங்கள் முழுமையாக ஏற்படும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading